லக்னோ: உ.பி., மாநிலத்தில் மனைவியிடம் அடி வாங்கிய கணவன் தொடர் அடிக்கு பயந்து போய் ஒரு மாத காலமாக மரத்தில் குடியிருந்து வருகிறார். இவரது நடவடிக்கை சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
உ.பி., மாநிலம் மவூ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பிரவேஷ் (42) இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். சண்டையில் மனைவி ராம் பிரவேஷை அடித்து நொறுக்கி விடுவாராம். பொறுத்தது பார்த்த ராம் திடீரென முடிவு ஒன்றை எடுத்தார். அதன்படி 80 அடி உயர மரம் ஒன்றில் ஏறி குடியிருக்க துவங்கினார். உணவு குடிநீர் உள்ளிட்டவை அவரது குடும்பத்தினர் கயிறு கட்டி மேலே அனுப்பி வைப்பாராம்.
இதனிடையே ராம் நடவடிக்கை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் ராம் பிரகாஷை கீழே இறங்கி வரும் படி கூறி உள்ளனர். ஆனால் ராம் பிரகாஷ் மரத்தை விட்டு கீழே இறங்க முடியாது என அடம்பிடித்துள்ளார்.
இதனிடையே ராம் வசித்து வரும் கிராமத்தை சேர்ந்த தீபக்குமார் என்பவர் கூறுகையில் ராம் மரத்தில் இருப்பதால் மரத்தில் இருந்தவாறு பல்வேறு வீடுகளில் நடைபெறும் சம்பவங்களை பார்த்துகொண்டிருக்கிறார் என புகார் எழுந்துள்ளது. மேலும் இவரது நடவடிக்கை பெண்களுக்கு இடையூறாக உள்ளது என போலீசில் புகார் கொடுத்தோம். அவர்கள் வந்து சொல்லியும் ராம் பிரகாஷ் கேட்கவில்லை. என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement