வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் (ஆக.,26) ஓய்வு பெற உள்ளார். அதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக அவரது அமர்வு விசாரணை இன்று நேரலையாக ஒளிப்பரப்பட்டது.
ஆந்திராவை சேர்ந்த என்.வி.ரமணா, 1983ல் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை துவக்கினார். அதன்பிறகு 2013ல் டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ல் உச்சநீதிமன்ற நீதிபதியானார். பின்னர் கடந்த ஆண்டும் ஏப்ரல் 6ம் தேதி நாட்டின் 48வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் இன்றுடன் (ஆக.,26) நிறைவடைகிறது. இதனைத்தொடர்ந்து யு.யு.லலித் புதிய தலைமை நீதிபதியாக நாளை பொறுப்பேற்க உள்ளார்.
இன்றுடன் என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. https://webcast.gov.in/events/MTc5Mg– என்ற இணையதளத்தில் இன்று காலை 10:30 மணி முதல் அவரது அமர்வின் விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்பானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement