மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்கப்படலாம் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அறிவித்துள்ளது. காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளனர்.