ரூ.7300 கோடியில் புதிய ஆலை. சுசுகி மோட்டார் நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்!

இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று சுசுகி மோட்டார் என்பதும், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுசுகி நிறுவனம் ரூபாய் 7300 கோடியில் புதிய ஆலை ஒன்றை குஜராத்தில் திறக்க உள்ள நிலையில் இந்த ஆலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இந்தியாவில் சுசுகி நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இந்த புதிய ஆலை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்லா சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. சுற்றுலாத்துறைக்கு கொண்டாட்டம்!

சுசுகியின் 40 ஆண்டு நிறைவு

சுசுகியின் 40 ஆண்டு நிறைவு

இந்தியாவில் சுசுகியின் 40 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் குஜராத் மற்றும் ஹரியானாவில் இரண்டு புதிய ஆலைகளை திறக்கவுள்ளது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் குஜராத்தில் இரண்டு நாள் பயணமாக செல்லவுள்ள பிரதமர் மோடி இந்த இரண்டு ஆலைகளையும் திறக்க உள்ளார்.

2 ஆலைகள் திறப்பு

2 ஆலைகள் திறப்பு

ஆகஸ்ட் 27ஆம் தேதி குஜராத்திற்கு தனது இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள ஹன்சல்பூரில் உள்ள சுசுகி குழுமத்தின் மின்சார வாகன பேட்டரி உற்பத்தி ஆலையை திறந்து வைக்கின்றார். அதன்பின் ஹரியானாவின் கார்கோடாவில் அதன் வாகன உற்பத்தி நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.7300 கோடி முதலீடு
 

ரூ.7300 கோடி முதலீடு

ஹன்சல்பூரில் உள்ள சுசுகி மோட்டார் குஜராத் எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தி நிலையம் சுமார் ரூ.7,300 கோடி முதலீட்டில் எலட்ரிக் வாகனங்களுக்கான அட்வான்ஸ் கெமிஸ்ட்ரி செல் பேட்டரிகளை தயாரிக்கும் வகையில் அமைக்கப்படும்.

ஹாரியானாவிலும் ஒரு ஆலை

ஹாரியானாவிலும் ஒரு ஆலை

ஹரியானாவில் உள்ள கார்கோடாவில் அமைக்கப்பட இருக்கும் வாகன உற்பத்தி நிலையம், ஆண்டுக்கு 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் திறனை கொண்டிருக்கும். இது உலகின் ஒரே தளத்தில் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக மாறும். கார்கோடா திட்டத்தின் முதல் கட்டம் ரூ.11,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.

தேர்தலை சந்திக்கும் குஜராத்

தேர்தலை சந்திக்கும் குஜராத்

இந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெறவுள்ள தனது சொந்த மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் காதி உத்சவ் தொடங்குதல், ஆகஸ்ட் 28-ஆம் தேதி புஜ்ஜில் ஸ்மிருதி வான் பூகம்ப நினைவகத்தைத் திறப்பது உள்ளிட்ட பல பொது நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அதன்பின் அவர் புஜ், கட்ச் பகுதியில் சுமார் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

நினைவு சின்னம்

நினைவு சின்னம்

குஜராத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு பேரழிவுகரமான நிலநடுக்கத்திற்கு பிறகு மக்களின் நெகிழ்ச்சியின் உணர்வைக் கொண்டாடும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்கப்படவுள்ளது. பூகம்ப அருங்காட்சியகம், மறுபிறப்பு, மறுகண்டுபிடிப்பு, மீட்டமை, மறுகட்டமைத்தல், மறுசிந்தனை, உயிர்ப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய ஏழு கருப்பொருள்களின் கீழ் ஏழு தொகுதிகளாக இந்த நினைவுச்சின்னம் பிரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார் சரோவர் திட்டம்

சர்தார் சரோவர் திட்டம்

நர்மதா நதியில் சர்தார் சரோவர் திட்டத்தின் கச்சக்கிளை கால்வாயையும், கட்ச் மாவட்டத்தின் சர்ஹாத் பால் பண்ணையின் புதிய தானியங்கி பால் பதப்படுத்தும் மற்றும் பேக்கிங் ஆலையையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PM Modi to lay foundation stone for Suzuki Motor’s ₹7,300crore EV Battery plant in Gujarat

PM Modi to lay foundation stone for Suzuki Motor’s ₹7,300crore EV Battery plant in Gujarat | ரூ.7300 கோடியில் புதிய ஆலை. சுசுகி மோட்டார் நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்!

Story first published: Friday, August 26, 2022, 8:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.