வாட்ஸ் அப்பிலேயே வங்கி சேவை.. எந்தெந்த வங்கிகள்..எப்படி தொடர்பு கொள்வது?

டிஜிட்டல் வளர்ச்சி என்பது நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்களாக மாறிவிட்டன. இது நம் நேரத்தை மிச்சப்படுத்தவும், அன்றாட பணிகளை எளிதில் செய்ய பயனுள்ளதாய் இருக்கிறது.

குறிப்பாக வங்கித் துறையில் டிஜிட்டல் வளர்ச்சியானது பெரியளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

ஒரு காலத்தில் யாருக்கேனும் பணம் கட்டி விட வேண்டுமெனில், வங்கிக்கு சென்று மணிக்கணக்கில் வரிசையில் நின்று பணம் கட்ட வேண்டும்.

அடுத்த இலக்கு ஐடிபிஐ வங்கி தான்.. 51% பங்குகளை விற்பனை செய்யலாம்..!

எளிதில் பரிவர்த்தனை

எளிதில் பரிவர்த்தனை

ஆனால் இன்று அப்படி இல்லை. யாருக்கு கட்ட வேண்டுமோ அவரின் யுபிஐ ஐடி மொபைல் நம்பர் இருந்தால் கூட போதுமானது. நொடிகளில் பணத்தை கட்டி விடலாம். அவர்கள் நமக்கும் நொடிகளில் அனுப்பலாம். அந்தளவுக்கு டிஜிட்டல் வளர்ச்சியானது வந்து விட்டது.

வாட்ஸ் அப்பில் சேவை

வாட்ஸ் அப்பில் சேவை

இதே வங்கிகள் ஆன்லைனில் சேவைகளை வழங்கி வந்தாலும், தற்போதைய காலகட்டங்களில் 24 மணி நேரமும் சில சேவைகளை பெற வாட்ஸ் அப்பிலும் கூட சேவை அளிக்கின்றன. முன்பெல்லாம் வங்கிகளில் விடுமுறை எனில் எந்த சேவையும் பெற முடியாது. ஆனால் இன்று அப்படியில்லை. 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாளும், வங்கி விடுமுறை நாட்களிலும் வாட்ஸ் அப் மூலம் சில சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.

எந்தெந்த வங்கிகள்
 

எந்தெந்த வங்கிகள்

நாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்டவை, வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவையை வழங்கி வருகின்றன. ஆக மேற்கண்ட வங்கி வாடிக்கையாளர்களாக இருப்பின், எளிதில் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் இந்த சேவையினை பெற்று கொள்ள முடியும்.

எஸ்பிஐ

எஸ்பிஐ

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, சமீபத்தில் தன் தனது வாட்ஸ் அப் சேவையினை தொடங்கியது. இதன் மூலம் வங்கிக் கணக்கின் பேலன்ஸ் இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட சில சேவைகளை பெற முடியும், இதற்காக வாடிக்கையாளர்கள் 90226 90226 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பலாம். இதற்கு உங்களது வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் வேண்டும். இந்த சேவையினை பெற நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்காக பதிவு செய்திருக்க வேண்டும்.

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளார் எனில் 7070022222 என்ற எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் 24 மணி நேரமும் பயன் பெற்றுக் கொள்ள முடியும். இதில் கிரெடிட் கார்டு, கடன் சேவை உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம். ஏற்கனவே உள்ள உங்களது கடன், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல சேவைகளையும் பெற்று கொள்ள முடியும்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியும் வாட்ஸ் அப் மூலம் வருடத்தில் 365 நாட்களும் சேவையை வழங்குகின்றது. வாடிக்கையாளார்கள் இதன் மூலம் உடனடி கடன், செக் புக், கிரடிட் கார்டு, பாஸ்புக், டெபிட்கார்டு சம்பந்தமான சேவையினை பெறலாம். இதிலும் வங்கிக் கணக்கு இருப்பு, உங்கள் கிரெடிட் கார்டு லிமிடெட், உங்களது கார்டினை பிளாக் அன்பிளாக் செய்தல், கார்டு எக்ஸ்பெய்ரி என பல விவரங்களையும் பார்த்துக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் 8640086400 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு ஹாய் என்று அனுப்ப வேண்டும்.

அதேபோல 9542000030 என்ற எண்ணிற்கு எஸ் எம் எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமும் சேவையினை பெறலாம்.

 

பேங்க் ஆப் பரோடா

பேங்க் ஆப் பரோடா

பேங்க் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்கள் 8433888777 என்ற எண்ணினை சேவ் செய்து ஹாய் கொடுக்கலாம். இதன் மூலம் கடன்களுக்கான விவரங்கள், புகார் அளித்தல், வட்டி விகிதம் மாற்ற கோரிக்கை, தொடர்பு கொள்ளுதல், வங்கியில் உள்ள பல்வேறு திட்டங்கள,பாஸ்டேக் சர்வீசஸ், யுபிஐ செக்புக், கார்டு, மெயில் ஐடி, வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட், பேலன்ஸ் செக் செய்தல் என பலவகையாக சேவைகளை பெற முடியும்.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கியில் 7036165000 என்ற வாட்ஸ் அப் மூலம் சேவையினை பெறலாம். இதன் மூலம் மற்ற வங்கிகளில் உள்ளதை போலவே பேலன்ஸ் இருப்பு, மினி ஸ்டேட்மெண்ட்,செக் புக் ஆர்டர், வீடியோ கேஓசி, உடனடி வங்கி சேவை, டெபிட் கார்டை பிளாக் செய்தல் என பல சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI Vs HDFC bank Vs ICICI Vs BOB Vs Axis bank: how to get whatsapp banking services?

SBI Vs HDFC bank Vs ICICI Vs BOB Vs Axis bank: how to get whatsapp banking services?/வாட்ஸ் அப்பிலேயே வங்கி சேவை.. எந்தெந்த வங்கிகள்..எப்படி தொடர்பு கொள்வது?

Story first published: Friday, August 26, 2022, 19:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.