விமானத்தில் இனி இண்டர்நெட் சேவை.. டாடா-வின் புதிய கூட்டணி..!

உலகளவில் தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் நிலையில், கடந்த சில வருடங்களாக விமானத்தில் வை-பை வாயிலாக இண்டர்நெட் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பல நிறுவனங்கள் உலகளவில் முயற்சி செய்து வருகிறது. இதில் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் சேவையும் அடங்கும்.

இந்த நிலையில் இந்தியாவில் விமானச் சேவையும் சரி விமானப் பயணிகள் எண்ணிக்கையும் சரி வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்திய விமானத்தில் இண்டர்நெட் சேவை அளிக்க வெளிநாட்டு நிறுவனம் களமிறங்கியுள்ளது.

இந்த மாபெரும் புரட்சி திட்டத்திற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் டாடா நெல்கோ உடன் கூட்டணி சேர உள்ளது.

அடடே இது நல்ல விஷயமாச்சே.. தங்கம் விலையில் தடுமாற்றம்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?

Intelsat நிறுவனம்

Intelsat நிறுவனம்

அமெரிக்கா மற்றும் லக்சம்பர்க் நகரங்களில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Intelsat நிறுவனம் இந்திய வானத்தில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கும் இண்டர்நெட் சேவை அளிப்பதற்காக டாடா Nelco நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டாடா நெல்கோ

டாடா நெல்கோ

டாடா நெல்கோ நிறுவனம் VSAT கனேக்ட்விட்டி, Satcom ப்ராஜெக்ட்ஸ், ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு சேவைகளை அளிக்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது. மேலும் டாடா நெல்கோ நிறுவனம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இத்தகைய எண்டர்பிரைஸ் சேவைகளை வழங்கி வருகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள்
 

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள்

இந்த ஒப்பந்தம் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள், இந்திய விமான நிலையத்திற்குச் செல்லும் அல்லது அங்கிருந்து பறக்கும் விமானங்கள் மற்றும் இந்திய எல்லைக்கு மேல் பறக்கும் விமானங்கள் ஆகியவற்றில் பிராட்பேண்ட் கவரேஜ் கிடைக்க வழி வகுக்கும். இதேபோல் இந்த ஒப்பந்தம் மூலம் Intelsat இன் விமானப் பங்காளிகள் மற்றும் விமானப் பயணிகளுக்குப் பயனளிக்கும்.

கூட்டணி நிறுவனங்கள்

கூட்டணி நிறுவனங்கள்

Intelsat நிறுவனத்துடன் IndJects, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை இணைந்துள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் அனைத்தும் விமானத்தில் இண்டர்நெட் சேவை அளிக்க இந்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா நெல்கோ ஆதிக்கம்

டாடா நெல்கோ ஆதிக்கம்

இந்த ஒப்பந்தம் மூலம் Intelsat நிறுவனத்திற்கும் சரி, டாடா நெல்கோ நிறுவனத்திற்கும் சரி மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவில் இப்பிரிவில் இயங்கும் ஒரு சில நிறுவனங்களில் டாடா நெல்கோ மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Luxembourg based Intelsat signs deal with Tata Nelco for in flight internet

Luxembourg based Intelsat signs deal with Tata Nelco for in flight internet விமானத்தில் இனி இண்டர்நெட் சேவை.. டாடா-வின் புதிய கூட்டணி..!

Story first published: Friday, August 26, 2022, 11:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.