ஹிந்தியில் ரூ.50 கோடி வசூலித்த கார்த்திகேயா 2
இந்த ஆண்டில் ஹிந்தியில் வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் தத்தா, அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் போன்ற படங்களும் கூட படுதோல்வியை சந்தித்தன. ஆனால் தென்னிந்தியாவில் வெளியாகும் பிரம்மாண்ட படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அங்கு சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கில் உருவான ஆர்ஆர்ஆர் , புஷ்பா மற்றும் தமிழில் உருவான விக்ரம், கேஜிஎப் 2 கன்னட படம் ஆகியவை பாலிவுட்டில் பெரிய அளவில் வசூல் செய்துள்ளன.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்தா நடித்து வெளியாகி உள்ள கார்த்திகேயன் 2 படமும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுவரை ஹிந்தியில் மட்டும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ள கார்த்திகேயன்- 2 படம், இன்னும் பெரிய அளவில் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.