ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தில் KKR நிறுவனம் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முதலீடு கடனைக் குறைப்பதற்கும் வணிகத்தை வளர்ப்பதற்கும் ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதிக்காக KKR அதன் உள்கட்டமைப்பு நிதியை பயன்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.
திவாலாகும் பியூச்சர் குரூப்.. கண்ணீருடன் கிஷோர் பியானி.. ரிலையன்ஸ், அமேசான் கைவிட்டது..!
ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ்
ஹீரோ குழுமத்தின் ஆற்றல் மிக்க நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் (HFE) நிறுவனத்தில் சுமார் $400 மில்லியன் முதலீடு செய்ய KKR நிறுவனம் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தைகளின் இறுதிச்சுற்றுகள் நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடன்
KKR நிறுவனர் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ராகுல் முஞ்சால் இந்த முதலீடு குறித்து கூறியபோது, ‘ கடனைத் திரும்ப பெறுவதற்கும் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நிதியளிப்பு ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால் இந்த முதலீடு குறித்த மற்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்த முதலீட்டுக்காக KKR அதன் உள்கட்டமைப்பு நிதியைப் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 ஆண்டு நிறுவனம்
கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனம், காற்றாலை மின்சாரம், உயர்தர கிரிட்-இணைக்கப்பட்ட சூரிய மேற்கூரை திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் உலகளாவிய பசுமை மற்றும் தூய்மையான தொழில்நுட்பத்தில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது.
ஹைட்ரஜன் உற்பத்தி
இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் 1 ஜிகாவாட் ஹைட்ரஜன் உற்பத்தி வசதிகளை ஏற்பாடு செய்ய, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஓமியம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் கூட்டு சேர்ந்தது. கடந்த மாதம், கேரள மாநில மின்சார வாரியத்தால் கேரளாவில் பத்து மெகாவாட் இணைக்கப்பட்ட மின் சேமிப்பு ஆலையை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற்றது.
சிறப்பான பணிகள்
மேலும் ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் குறித்த பணிகளை சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
KKR looks to invest $400 m in Hero Future Energies
KKR looks to invest $400 m in Hero Future Energies | ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் KKR!