75,000 பேருக்கு வேலை வாய்ப்பு.. டெல்லிவரி கொடுத்த சூப்பர் அப்டேட்..!

லாகிஸ்டிக்ஸ் நிறுவனமான டெல்லிவரி அடுத்த ஒன்றரை மாதங்களில், பருவகால வேலைக்காக 75,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இது அதன் பார்சல் டெலிவரி ஏற்றுமதியினை ஒரு நாளைக்கு 1.5 மில்லியனாக விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேற்கண்ட பணியமர்த்தலில் 10,000-க்கும் மேற்பட்டோர் டெல்லிவரியின் நுழைவாயில்கள், கிடங்குகள் மற்றும் கடைசி மைல் டெலிவரியாக இருப்பார்கள் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை கூடவா டெலிவரி செய்வீங்க.. Blinkit நிறுவனத்தின் புதிய சேவை..!

எப்படி பணியமர்த்தல் இருக்கும்?

எப்படி பணியமர்த்தல் இருக்கும்?

இந்த பணியமர்த்தலானது பார்சல் அளவு மற்றும் விரைவில் டெலிவரி செய்தல் போன்ற அம்சங்களை பொறுத்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் முழு தானியங்கி மெகா கேட்வே சேவையினையும் டவுருவில் கொண்டு வந்தது. எனினும் நாடு முழுவதும் பண்டிகை காலத்தில் பார்சல்கள் அதிகரிக்கும் என்பதால், இந்த மெகா பணியமர்த்தல் திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

 

ஏஜெண்டுகளை அதிகரிக்க திட்டம்

ஏஜெண்டுகளை அதிகரிக்க திட்டம்

தனி பைக்கர்ஸ், உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்களை அதிகரிப்பதன் மூலமும் வருவாயினையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இவர்கள் மட்டும் அல்ல, லாஸ்ட் மைல் ஏஜென்ட் திட்டத்தின் கீழ் 50,000 கடைசி மைல் ஏஜெண்டுகளை வேலைக்கு அமர்த்த போவதாகவும் தெரிவித்துள்ளது.

 யாருக்கெல்லாம் பயன்
 

யாருக்கெல்லாம் பயன்

இதன் மூலம் சுயதொழில் செய்யும் தனி நபர்கள், மாணவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழில் வல்லுனர்கள்மு ஆகியோருக்கு நெகிழ்வான வருவாய் வாய்ப்புகளை வழங்குகிறது.

டெல்லி வரி நிறுவனம் தளவாட சேவைகள், டெல்லிவரி எக்ஸ்பிரஸ், பார்சல் சேவை, கனரக பொருட்கள் டெலிவரி, கிடங்கு மற்றும் கட்டண வசூல் மூலம் சேவையை வழங்குகிறது.

 

 வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் அதன் சேவைகளை விரிவாக்கம் செய்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவினால் முடங்கியிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு இந்த நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம், கடந்த மே மாதம் தான் பங்கு சந்தையில் நுழைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Delivery plans to hire 75,000 employees ahead of festival season

Delivery plans to hire 75,000 employees ahead of festival season/75,000 பேருக்கு வேலை வாய்ப்பு.. டெல்லிவரி கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Story first published: Friday, August 26, 2022, 20:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.