அமெரிக்காவில் ஆர்ஆர் என்ற ஏல நிறுவனத்தின் சார்பாக சமீபத்தில் 70கும் மேற்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. அதில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆப்பிள் 1 சர்க்யூட் போர்டு , ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான ஸ்டீவ் வோஸ்னியாக் பயன்படுத்திய சால்டரிங் மெசின் , முதல் தலைமுறை ஆப்பிள் ஐபாட்(5GB) ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
இந்த முதல் தலைமுறை ஐபோன் ஜனவரி மாதம் 2007 ஆம் ஆண்டு அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாபால் வெளியிடப்பட்டது. இந்த ஐபோன் 3.5இன்ச் டிஸ்பிளேவுடன் 2MP கேமரா வசதியோடு 4ஜிபி மற்றும் 8ஜிபி வேரியண்ட்டுகளில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன்.
தற்போது நடந்த ஏலத்தில் இந்த பொருட்கள் எல்லாம் எதிர்பார்க்காத விதத்தில் விலைக்கு போயுள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை ஐபோன் 8ஜிபி வேரியண்ட் 35,414 டாலருக்கு ஏலம் போயுள்ளது. இது இந்திய மதிப்பில் 28லட்சமாகும். மேலும் வோஸ்னியாக்கின் சால்டரிங் மெசின் 677,196 டாலருக்கும் , முதல் தலைமுறை ஐபாட் 25,000 டாலருக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில் ஆப்பிள் ஐபோன் 14 வெளியாகவுள்ள நிலையில் ஆப்பிளின் முதல் தலைமுறை மாடல் 28 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆப்பிள் முதல்தலைமுறை ஐபோனுக்கும் தற்போது வெளியாகவுள்ள ஐபோன் 14க்கும் உள்ள அம்சங்களை ஒப்பிட்டால் 100% வேறுபட்டிருக்கும்.
குறிப்பாக வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 14இல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்போடு வருகிறது. 48MP வைடு மற்றும் 12MP அல்ட்ரா வைடு கேமராக்கள் மற்றும் 8k வீடியோ வசதிகள் உள்ளன.8GB ரேம் வசதியோடும் 120Hz refreshing rate வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடிப்படை ரோம் வசதி 64GBயில் துவங்கி 256க்கும் மேல் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே போல் 14 சிரிஸில் வெளியாகும் ஐபோன் Pro மற்றும் Pro Max ஆகிய மாடல்களில் A16 பயோனிக் சிப் ப்ராசசர் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐபோன் முதல் தலைமுறை மாடல் இவ்வளவு விலைக்கு ஏலத்திற்கு போயிருப்பது இன்னுமும் மக்கள் எந்தளவிற்கு ஐபோன் மீது ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது என பலரும் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
– சுபாஷ் சந்திரபோஸ்