Crypto Scam: AI டெக்னாலஜியை பயன்படுத்தி கிரிப்டோ கரன்சியை திருடிய கும்பல்!

உலக அளவில் சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சி பிரபலமாகி வருகிறது. பலரும் கிரிப்டோ கரன்சிதான் எதிர்காலம் என நம்பி அதன் மீது முதலீடுகளை போட்டு வருகின்றனர். பல நாடுகளும் கூட பிட்காயின் வர்த்தகத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க துவங்கிவிட்டனர்.

அப்படி உலக அளவில் பல கோடி பேர் கிரிப்டோ கரன்சி சார்ந்து ஸ்டார்ட்டப்களை துவங்குகின்றனர். அப்படி துவங்குபவர்கள் முதல் படியே BINANCE என்ற பிட்காயின் வர்த்தக நிறுவனத்தில் பதிவு செய்வதே குறிக்கோளாகும். இதனால் அவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் மற்றும் அதிகமான வாடிக்கையாளர்களின் பார்வையும் கிடைக்கிறது.

இதற்காகவே உலகமெங்கிலும் இருந்து இந்நிறுவனத்தில் பதிவு செய்வதற்காக காத்திருப்பவர்கள் பட்டியல் அதிகம். அந்த நிறுவனமும் சுலபமாக யார் வந்தாலும் சேர்த்து கொள்ளும் நிறுவனம் அல்ல. பல கட்ட வடிகட்டல் மற்றும் நடைமுறைகளுக்கு பிறகே வர்த்தகர்கள் சேர்த்து கொள்ள படுவார்கள்.

அப்படிப்பட்ட நிறுவனத்தின் முதன்மை தொடர்பு அதிகாரி போல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் deepfake செய்து வீடீயோகால் மூலம் பல வர்த்தகர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளது அந்த கும்பல். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் deepfake என்றழைக்கப்படும் ஒருவரை போலவே ஒளி வடிவில் ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் கிரிப்டோ வர்த்தகர்களை வீடியோகாலில் தொடர்பு கொண்டு பினான்ஸில் அவர்களை பதிவு செய்வது போல ஏமாற்றி பணம் பறித்துள்ளனர்.

பினான்ஸில் பதிவு செய்வதற்கு வர்த்தகர்கள் பணம் கட்ட வேண்டும். அது ஒவ்வொரு வர்த்தகருக்கும் தன்மைக்கேற்றவாரு மாறுபடும். எனவே பினான்ஸில் சேருவதற்காக காத்துக்கிடக்கும் கிரிப்டோ வர்த்தகர்களின் அவசரத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஏமாற்றி உள்ளார்கள்.

இதுகுறித்து பேசிய பினான்சின் முதன்மை தொடர்பு அதிகாரி நீண்ட நாட்களாக திட்டமிட்டு என்னுடைய பழைய நேர்காணல்களையெல்லாம் சேகரித்து என்னுடைய அடையாளத்தை deepfaking செய்து வாடிக்கையாளர்களின் பணத்தை திருடியுள்ளனர். தனக்கே, இதனால் பாதிக்கப்பட்ட வர்த்தகர் ஒருவர் தான் ஏமாற்ற பட்டிருக்கிறோம் என்பதே அறியாமல் தன்னை சேர்த்து கொண்டதற்காக என்னிடம் வந்து நன்றி செல்லும்போதுதான் இது தெரிய வந்தது என்று அவர் கூறியுள்ளார்.

– சுபாஷ் சந்திரபோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.