அதிமுக உட்கட்சி பிரச்சனை பூதாகரமாக வெடித்து கிளம்பியுள்ளது.
, எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நானா? நீயா? கோதாவில் குதிக்க பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்.
அத்துடன் நிற்காமல், கட்சியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை அதிரடியாக நீக்கி அதிமுக வட்டாரத்தை கதிகலங்கச் செய்ததோடு, தமிழக அரசியலையே எடப்பாடி பழனிச்சாமி உற்றுநோக்க செய்தார்.
இதில், ஏகத்துக்கும் டென்ஷன் ஆன ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, நீதிமன்ற கதவுகளை தட்டிய நிலையில், அவருக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகி எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடுப்பேற்றி உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு சாதகமாக வந்ததை அவரது ஆதரவாளர்கள் வேற லெவலுக்கு கொண்டாடி வருகின்றனர். குறுக்கு வழியில் கட்சியை கைப்பற்றிட முயன்றதாக ஓபிஎஸ் தரப்பால் குற்றம்சாட்டப்படும் எடப்பாடி பழனிச்சாமியோ அடுத்து என்ன செய்வது? என புரியாமல் தவித்து வருகிறார்.
இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஓபிஎஸ் பகிரங்க அழைப்பு விடுத்து ள்ளார். இதை அவர்களும் ஏற்று ஓபிஎஸ்சை தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, எடப்பாடி மேல்முறையீடு வழக்கில், மீண்டும் ஓபிஎஸ் கையே ஓங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அதிமுக உறுப்பினராக மட்டுமே எடப்பாடி தொடர்கிறார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீதிமன்ற உத்தரவு உள்ளதால்,‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்’ என்கிற அதிகாரப்பூர்வ பதவியுடன் கெத்தாக வலம் வருவதால் கட்சியினர் பலரும் எடப்பாடி அணியில் இருந்து தாவி ஓபிஎஸ் பக்கம் வந்தபடி உள்ளனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் திடீரென ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவு உங்களுக்கு தான் என தெளிவுப்படுத்திவிட்டார்.
ஏற்கனவே நடிகர் பாக்யராஜ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்சை சந்தித்து ஆதரவை வழங்கிய நிலையில் அடுத்தடுத்து அதிமுகவினர் முகாம் மாறி வருகிற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் பதுங்கி கிடந்த ஓபிஎஸ் புலி பாய்ச்சல் போட்டு அதகளப்படுத்தி வருவதால் எடப்பாடி கூடாரம் ஆட்டம் கண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.