இந்திய வர்த்தக சந்தையில் 5 வருடத்திற்கு முன்பு கௌதம் அதானியின் அதானி குழுமம் பிரபலமான வர்த்தக குழுமம் ஆக இருந்தாலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்கு இணையான நிறுவனமாக இல்லை.
ஆனால் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐ அதானி குழுமம் முந்தியது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானியையும் முந்தியுள்ளார் கௌதம் அதானி. ஆனால் இப்போது தான் போட்டி வீரியம் அடைந்துள்ளது என கூற முடியும்.
அம்பானிக்கு போட்டியாக அதானியும், அதானிக்கு போட்டியாக அம்பானியும் தற்போது அனைத்து துறைகளிலும் முதலீடு செய்தும் போட்டி போட்டும் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இருவரும் அனல் மின்நிலையத்தை வாங்குவதற்கு போட்டிப்போட்டு வருகின்றனர்.
NDTV பங்குகளை கைப்பற்றும் அதானி குழுமம்.. முகேஷ் அம்பானி உடன் போட்டி..!
Lanco Amarkantak power நிறுவனம்
கடனில் சிக்கியுள்ள Lanco Amarkantak power நிறுவனத்தை கைப்பற்ற தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம், கௌதம் அதானியின் அதானி பவர் நிறுவனமும் போட்டிப்போட்டு வருகின்றனர்.
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்
இதுதவிர அரசு நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனம் REC நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தை வாங்க ஏல விண்ணப்பத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஏல தொகை
தற்போது வெளியான தகவல் படி விண்ணப்பித்த 3 ஏல தொகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் அதிக தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. ரிலையன்ஸ் லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தை கைப்பற்ற 1960 கோடி ரூபாய் அளவிலான ஏல தொகைக்கு விண்ணப்பித்துள்ளது, அதிலும் முக்கியமாக பெரும்பாலான தொகையை பணமாக செலுத்தவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதனால் லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தை கைப்பற்றும் போட்டியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெற்றிப்பெற்றால் முதல் முறையாக அனல் மின் துறையில் ரிலையன்ஸ் குழுமம் இறங்கும். இது ரிலையன்ஸ்-க்கு புதிய வர்த்தக துறையாக இருக்கும்.
அதானி பவர்
லான்கோ அமர்கண்டக் பவர்-க்கு அதானி பவர் சுமார் 1800 கோடி ரூபாய் தொகையை கொடுத்திருந்தாலும் அதை பத்திரங்களாகவும், வருடம் 8 சதவீத வட்டி தொகையை அளிப்பதாகவும் 5 வருடத்தில் இத்தொகையை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பவர் பைனான்ஸ் கார்ப்ரேஷன் கூட்டணி
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் REC நிறுவன கூட்டணி 20 வருடத்தில் 3400 கோடி ரூபாயும், 40 சதவீத பங்குகளை கடன் கொடுத்தவர்களுக்கும் அளிக்கும் ஆஃபரை முன்வைத்துள்ளது. இதுப்போன்ற கடனில் சிக்கியுள்ள நிறுவனங்களை விற்பனை செய்யும் போது உடனடி பணத்தை தான் அனைத்து கடனாளர்களும் எதிர்பார்ப்பார்கள்.
11 பேர் போட்டி
எனவே லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தை கைப்பற்ற ரிலையன்ஸ்-க்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இந்நிறுவனத்தை கைப்பற்ற 11 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
Mukesh Ambani, Gautam adani submit bids for Lanco Amarkantak, Reliance Industries leads the race
Mukesh Ambani, Gautam adani submit bids for Lanco Amarkantak அனல் மின்நிலையத்தை வாங்கும் முகேஷ் அம்பானி.. சும்மா இருப்பாரா அதானி..?