ஆதார் என்பது UIDAI அமைப்பு ஒவ்வொரு இந்திய மக்களுக்கும் வழங்கும் 12 இலக்க அடையாள எண்ணாகும். ஒருவரது ஆதாரில் உள்ள தகவல்கள் துல்லியமாகவும், புதுப்பித்ததாகவும் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
உங்கள் ஆதார் விவரங்களை எவ்வாறு புதுப்பிக்கலாம் மற்றும் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை இங்கே பார்க்கலாம். இதோடு ஒரு தகவலை எத்தனை முறை மாற்ற முடியும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
சில தகவல்களை ஒரு முறைக்கு மேல் மாற்ற முடியாது என்பதால் சரியான தகவல்களைத் திருத்துங்கள்.
சீனா-வின் பெல்ட் & ரோடு திட்டத்தின் நிலை என்ன.. சொந்த காசில் சூனியமா..?
மொபைல் எண் கட்டாயம்
ஆதார் ஆன்லைன் சேவைகளை அணுக, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவை. மொபைல் எண்ணை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது. உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, அருகில் உள்ள ஆதார் சேவா கேந்திரா (ASK) அல்லது ஆதார் பதிவு புதுப்பிப்பு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆதார் கட்டணம் விவரங்கள்
1. கட்டாயப் பயோமெட்ரிக் புதுப்பிப்பு – இலவசம்
2. முகவரி புதுப்பிப்பு (எந்த வகை) – ரூ. 50/- (ஜிஎஸ்டி உட்பட)
3. பயோமெட்ரிக் அப்டேட் – ரூ. 100/- (ஜிஎஸ்டி உட்பட)
4. முகவரி புதுப்பித்தலுடன் பயோமெட்ரிக் ரூ. 100/-(வரிகள் உட்பட)
5. A4 தாளில் ஆதார் பதிவிறக்கம் மற்றும் வண்ண அச்சிடுதல் – ஒரு ஆதாருக்கு ரூ.30/- (ஜிஎஸ்டி உட்பட).
ஆதாரில் பெயர் புதுப்பிப்பு
UIDAI அலுவலகத் தகவல் படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர் இப்போது இரண்டு முறை மட்டுமே ஆதார் அட்டையில் தனது பெயரை மாற்ற முடியும்.
பிறந்த தேதி (DoB) புதுப்பிப்பு ஆதார் அட்டை
உங்கள் ஆதாரில் பிறந்த தேதியை (DOB) ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும். ஒரு முறைக்கு மேல் மாற்ற வேண்டும் என்றால் விதிவிலக்கான நிகழ்வு என எடுத்துக்கொள்ளப்படும். UIDAI இன் படி, 2வது முறை புதுப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் மையத்தில் கோரிக்கையைப் புதுப்பித்து, விதிவிலக்கின் கீழ் புதுப்பிப்புக்கான ஒப்புதலுக்காக UIDAI இன் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தை அணுக வேண்டும்.
பாலினம் புதுப்பித்தல்
ஆதார் அட்டையில் பாலினம் புதுப்பித்தல் செய்ய ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 2வது முறை புதுப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் மையத்தில் கோரிக்கையைப் புதுப்பித்து, விதிவிலக்கின் கீழ் புதுப்பிப்புக்கான ஒப்புதலுக்காக UIDAI இன் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தை அணுக வேண்டும்.
How many times you can update Aadhaar details
How many times you can update Aadhaar details ஆதாரில் ‘இந்த’ தகவலை ஒரு முறை மட்டும் தான் மாற்ற முடியும்..!