ஐதராபாத் : ஆன்ட்டி என்றும் அழைத்து கிண்டல் செய்பவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்வேன் என்று ஆன்லைன் ட்ரோல்களுக்கு பதிலளித்துள்ளார் நடிகை அனசுயா பரத்வாஜ்.
தெலுங்கு சினிமா மற்றும் டிவிக்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை அனசுயா பரத்வாஜ், சர்ச்சை பேச்சுக்களால் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’படத்தில் வில்லியாக நடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார். கில்லாடி உள்ளிட்ட பல பிரபலமான படங்களிலும் நடித்துள்ளார்.
லைகர் பற்றி அனுசுயா விமர்சனம்
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லைகர்’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு பக்கம் வசூலை குவித்தாலும் மற்றொரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த படம் பற்றி நடிகை அனுசுயாவும் விமர்சனம் செய்து, கருத்து தெரிவித்துள்ளார்.
இப்போ இது தேவையா
அர்ஜுன் ரெட்டி படத்தின் ப்ரொமோஷனின் போது விஜய் தேவரகொண்டா தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதையும், அதனால் சர்ச்சை ஏற்பட்டதையும் அனுசுயா தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.5 வருடங்கள் ஆகிவிட்டப் பிறகும், அர்ஜுன் ரெட்டி படத்தின் போது பேசியதை இப்போ குறிப்பிட்டு போட்ட ட்வீடால் ஆன்லைன் ட்ரோலிங்கிற்கு ஆளாகிவிட்டார் அனுசுயா.
ஆன்ட்டி என ட்ரோல் செய்த ரசிகர்கள்
அனசுயாவின் ட்வீட் பல ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது, அந்த ட்வீட் குறித்து ரீ ட்வீட் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். அவரை ட்விட்டரில் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பலர் ஆன்ட்டி என அழைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.
போலீசுக்கு போவேன்
ட்ரோல்களுக்கு பதிலளித்துள்ள அனசுயா, “என்னை “ஆன்ட்டி” என்று அழைக்கும் ஒவ்வொரு அக்கௌண்டையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்துள்ளேன். எந்த நியாயமான காரணமும் இல்லாமல் என்னை அவமதிப்புச் செய்வது தவறு. இதுவே எனது இறுதி எச்சரிக்கை.” என்று பதிலளித்துள்ளார். தன்னை தொடர்ந்து ஆன்ட்டி என்று அழைத்தால் போலீசுக்கு போவதாகவும் எச்சரித்துள்ளார்.
என்னை எப்படி அப்படி கூப்பிடலாம்
மேலும் தனக்கு 37 வயது தான் ஆகிறது என்றும், 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் எப்படி என்னை ஆன்ட்டி என்று அழைக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக இன்னும் அவரை ஆன்ட்டி என்று தான் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.