எதிர்வரும் 30ஆம்திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் மக்கள்வாத வரவு செலவுத்திட்டமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள தேவையான மாற்றீட்டு செலவு புதிதாக இணைத்து, பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் இடைக்கால வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன் மேலும் கூறினார்.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஆகஸ்ட் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் என்று பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..