இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டிலும் அடுத்த ஆண்டிலும் 7.4 சதவீத வளர்ச்சியைக் காணும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா புதிய முதலீடுகளை ஈர்த்து வருவதாகவும், அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிக வேகமாக இருக்கும் என்று பல உலக நிறுவனங்கள் கணித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
உலக நாடுகள் பணவீக்கத்தால் மிக மோசமான நிலையை அடைந்திருக்கும் நிலையில் இந்தியா அதன் பாதிப்புகளைப் பெரிய அளவில் எதிர்கொண்டு சமாளித்துள்ளது.
ஆனால் டாலர் ஆதிக்கத்தால் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாகச் சில பாதிப்புகள் இந்தியப் பொருளாதாரத்திற்கும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு.. மக்கள் நிம்மதி..!
நிர்மலா சீதாராமன்
வங்கிகள் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசின் சொந்த மதிப்பீடுகள் சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் அடிப்படையில் காட்டப்பட்டுள்ளன, இதனால் நிச்சயமாக 7.4 சதவீதம் சதவீத வளர்ச்சிப் பாதையில் இருக்கிறோம்.
ஜிடிபி வளர்ச்சி
மேலும் இந்த 7.4 சதவீத ஜிடிபி வளர்ச்சி நடப்பு ஆண்டில் மட்டும் அல்லாமல் அடுத்த நிதியாண்டிலும் தொடரும் என இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஐஎம்எப் மற்றும் உலக வங்கி
அதோடு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் என்று கணித்துள்ளதாகவும், இந்த அமைப்புகளின் மதிப்பீடுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பீடுகளுடன் ஒத்துப்போவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சர்வதேச பொருளாதாரம்
உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்ந்து சவாலானதாக உள்ளது, மேலும் புதிய பாதிப்புகளுக்கும், அதிகப்படியான பாதிப்புகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், புதிய முயற்சிகளை இத்தகைய சூழ்நிலையில் எடுக்கச் சரியான நேரம் அல்ல என்று அவர் கூறினார்.
ஏற்றுமதி
உலகளாவிய வளர்ச்சி குறைந்து வருவதால் ஏற்றுமதி துறை கணிசமான பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது, ஆனால் இந்த நிலைமையைச் சமாளிக்க அனைத்து தரப்பினருடனும் அரசு செயல்படும் என்று மத்திய நிதியமைச்சர் இக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
Indian economy will grow 7.4 percent for two years says FM Nirmala Sitharaman
Indian economy will grow 7.4 percent for two years says FM Nirmala Sitharaman இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கும்.. நிர்மலா சீதாராமன் பதில்..!