இந்த ஆட்டோமொபைல் சந்தையில் அனைத்து பிரிவுகளிலும் போட்டி அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் பெரிய கார்களுக்கான மோகம் அதிகரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் SUV பிரிவில் அதன் மேலாதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் புதிய எஸ்யூவி மாடல்களை வெளியிடவும் அதன் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் எஸ்யூவி போட்டில் தீவிரமாக இருக்கும் வேளையில் டாடா மோட்டார்ஸ் இப்பிரிவில் தீவிரம் காட்டியுள்ளது போட்டி சூடுப்பிடிக்கும்.
ஆதாரில் ‘இந்த’ தகவலை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்..!
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் தற்போது SUV கார் வரிசையில் பஞ்ச், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையில் கூடுதல் அம்சங்களுடன் புதிய வகைகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.
SUV வர்த்தகப் பிரிவு
புதிய கார்களை அறிமுகம் செய்வதன் மூலம் எங்கள் நுகர்வோர் தளத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் SUV வர்த்தகப் பிரிவை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் முன்னணி SUV பிராண்ட் என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தீவிரமாக இருக்கிறோம் என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் துணைத் தலைவர் ராஜன் அம்பா கூறியுள்ளார்.
முக்கிய மாற்றம்
இது தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளில் வாடிக்கையாளரை ஈர்க்கவும் உற்சாகப்படுத்தும் வகையிலும் வடிவமைப்பு, பாதுகாப்பு மற்றும் driving pleasure ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இளம் தலைமைமுறையினரை புதிய வாடிக்கையாளர்களாக ஈர்க்க பல மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
2.22 லட்சம் கார்கள்
டாடா மோட்டார்ஸ் 2021 ஆம் நிதியாண்டில் 2.22 லட்சம் கார்களை விற்பனை செய்த நிலையில், 2022 ஆம் நிதியாண்டில் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகப்படியான எஸ்யூவி கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளனர்.
67 சதவீத சந்தை
இந்த நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் விற்பனையில் ஒட்டுமொத்த SUV தயாரிப்புப் பங்களிப்பு 67 சதவீதமாக இருந்தது. இது இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையின் சராசரி அளவான 40 சதவீதத்தை விட டாடா மோட்டார்ஸ் எஸ்யூவி விற்பனை அதிகமாகும்.
Tata Motors to retain dominant SUV position; Unveil new variants and expand its customer base
Tata Motors to retain dominant SUV position; Unveil new variants and expand its customer base இனி SUV கார் தான்.. டாடா மோட்டார்ஸ் மாஸ் திட்டம்..!