இப்படித்தான் பாடுவேன் இல்லன்னா நடிக்க மாட்டேன்… ஷாஜகான் காமெடி உருவான விதம் பற்றி கோவை சரளா

சென்னை: நடிகை மனோரமாவின் இடத்தில் கோவை சரளா வந்தது போல இன்றுவரை அவரது இடத்தைப் பிடிக்க வேறொரு நடிகை வரவில்லை.

தற்சமயம் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்கிற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக் கொன்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் நடித்த ஷாஜஹான் படத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வொன்றை கோவை சரளா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அலைபாயுதே

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் மாதவன் அறிமுகமான அலைபாயுதே திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்று அனைவருக்குமே தெரியும். அதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரகுமானின் இசை. படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. புதிய கதாநாயகனுக்கு ஏற்றார் போல அவருடைய இசையும் மிகவும் புதிதாக இருந்தது. அதற்கு நிகராக அமைந்தது வைரமுத்துவின் வரிகள்.அதில் முக்கியமான பாடல்தான் சினேகிதனே பாடல்.

ஷாஜஹான்

ஷாஜஹான்

பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க பூவே உனக்காக வெற்றியை கொடுத்த இயக்குநர் விக்ரமன் மற்றும் விஜய் ஒப்பந்தமானார்கள். விக்ரமனுடன் கருத்து வேறுபாடு காரணமாக விஜய் அந்தப் படத்திலிருந்து விலகவே அவர் கொடுத்த கால்ஷீட்டை ரவி என்று இயக்குநரிடம் கொடுத்து சினேகா ஜெகன் என்கிற திரைப்படத்தை துவங்கினார் ஆர்.பி.சௌத்ரி. பின்னர் அந்தப் படம் ஷாஜகான் என்று தலைப்பில் வெளி வந்து மிகப்பெரிய ஹிட் ஆனது.

விவேக் கோவை சரளா

விவேக் கோவை சரளா

அந்தப் படத்தில் பாடல்கள் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றதோ அதே அளவிற்கு நகைச்சுவை காட்சிகளும் இன்றுவரை மக்கள் மத்தியில் பிரபலம். நடிகர் விவேக் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த காலம் அது. அதில் பிச்சைக்காரி என்று தெரியாமல் அவருடன் ஒரு இரவு தங்கி விடுவார் விவேக். அந்த இரவில் இருட்டில் அவர்கள் சிநேகிதனே பாடலை பாடுவது போல் காட்சி இருந்ததாம்.

தயங்கிய இயக்குநர்

தயங்கிய இயக்குநர்

அப்படியே அந்தப் பாடலை பாட வேண்டாம் என்று கோவை சரளா இம்ப்ரவைஸ் செய்து வித்தியாசமான தொணியில் அதனை பாடி காட்டினாராம். இயக்குநர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். காரணம் மணிரத்தினம் பார்த்தால் கடுப்பாகிவிடுவார். பெரிய ஹிட்டான பாடலை இப்படி பாடினால் மக்களும் ரசிக்க மாட்டார்கள் என்று சொல்ல இருவரும் மாறி மாறி வாதம் செய்தார்களாம். இறுதியாக இப்படி பாடினால்தான் நடிப்பேன் ஒருவேளை நடித்து அது சரியாக வராவிட்டால் படப்பிடிப்பிற்கான செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அடம்பிடித்து தன்னுடைய வெர்ஷனில் பாடி நடித்தாராம். ஒரிஜினலை விட நான் பாடப் போவது ஹிட் ஆகும் என்று கூறி நடித்த அந்தக் காட்சி உண்மையாகவே பெரிய ஹிட் ஆனது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.