தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா கடந்தவாரம் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தவாக நடித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் மதுரையில் நடந்த விருமன் பட இசை வெளியீட்டு விழாவிலும் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார்.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி, திடீர் உடலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக திடீரென எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் எம்.ஜி.எம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ராஜகோபால் மேற்பார்வையில், பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதற்கான ஏற்பாட்டினை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி .சண்முகம் செய்ததாக கூறப்படும் நிலையில், பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி, சினிமா பிரபலங்களும், அவரது நண்பர்களும், தமிழ் ரசிகர்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் சமூகலைதளங்களில் அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்று கூறி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று எம்.ஜி.எம் மருத்துவமனையில் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் குறித்த விபரம் வெளியானதை தொடர்ந்து அவர் உடல்நிலை நல்ல நிலையில் சீராக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று எம்.ஜி.எம் மருத்துவமனையில் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் குறித்த விபரம் வெளியானதை தொடர்ந்து அவர் உடல்நிலை நல்ல நிலையில் சீராக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனிடையே தற்போது இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை தொடர்பான அறிக்கைய எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 81 வயதாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 26-ந் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சையின் காரணமாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil