இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு பாரிய அளவில் அதிகரிப்பு


இலங்கையில் தற்போது குடும்பம் ஒன்றின் மாதாந்த வாழ்க்கைச்  செலவு பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் இவ்வாறு சாதாரண குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

பாரிய அளவில் அதிகரித்த வாழ்க்கைச் செலவு

இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு பாரிய அளவில் அதிகரிப்பு | Living Cost Sri Lankan Increased

இதன்படி, சாதாரண குடும்பம் ஒன்றின்  மாதாந்த வாழ்க்கைச் செலவு ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. 

பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளவிபரவியல் ஆய்வுகள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்த வாழ்க்கைச்  செலவு 63 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.

எனினும் தற்போது குறித்த தொகை 47 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைகழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.