இலங்கையிலிருந்து 8 பேர் தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரை சேர்ந்த இந்துமதி, இவரது 10 வயது பேத்தி, 7, 4 வயதுடைய பேரன்கள், சசிகுமார்(35), இவரது 9 வயது மகள், 7 வயது மகன் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெயந்தினி(30) ஆகியோர் படகில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று வந்தனர். மரைன் போலீசார் மணல் திட்டில் இருந்து 8 பேரையும் மீட்டு அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர் இலங்கையில் இருந்து இதுவரை 125க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.