உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உதய் உமேஷ் லலித் பதவி ஏற்றார்.
உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணாவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித் என்பவரை நியமிக்க, மத்திய சட்டத் துறை அமைச்சகத்திற்கு, என்.வி.ரமணா பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் இன்று, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக, உதய் உமேஷ் லலித் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்வார். இவர், 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.