டெல்லி: உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி இடம்பெற்றுள்ளார். 75 சதவீத ஒட்டுக்களுடன் பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மார்னிங் கன்சல்ட் சர்வே ( morning consult survey) என்ற அமைப்பு நடத்திய சர்வேயில், மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் பட்டியலில் 75 சதவீத ஓட்டுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளதாகதெரிவித்து உள்ளது. ஏற்கனவே நவம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022ல் நடத்தப்பட்ட சர்வேயில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் முதலிடத்தில் தொடர்கிறார்.
மார்னிங் கன்சல்ட் அமைப்பு பிரபலமான உலக தலைவர்கள் யார் என்பது குறித்து, ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் இந்த ஆய்வுகளை நடத்தியதாக தெரிவித்த உள்ளது. . இந்த பட்டியலில், எடுத்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 22 உலகத் தலைவர்களைக் கொண்ட பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 75% ஆதரவு பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகளாவிய செல்வாக்கு ஒப்புதல் மதிப்பீட்டில், மெக்சிகோ அதிபர் ஆண்டர்ஸ் இமானுவேல் 63 சதவீத மக்கள் ஆதவுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54 சதவீதம் மக்கள் ஆதரவுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 42 சதவீத மக்கள் ஆதரவுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவீத ஓட்டுக்களுடன் 5-வது இடம் பிடித்துள்ளார். கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீத ஓட்டுக்களை பெற்று 6வது இடத்தையும், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 38 சதவீத ஓட்டுக்களை பெற்று 7வது இடத்தை பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.