உலக பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி புதிய வரலாறு படைத்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் ஹோகி டகுரோ, கோபயாஷி யுகோ ஜோடியை சந்தித்தது. சமீபத்தில் முடிந்த பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.இதன்மூலம் உலக பாட்மின்டன் ஆண்கள் இரட்டையரில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.
தவிர, உலக பாட்மின்டன் இரட்டையரில் பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்திய ஜோடியானது. ஏற்கனவே 2011ல் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலம் வென்றிருந்தது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன், துருவ் கபிலா ஜோடி 8-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் முகமது அக்சன், ஹென்ட்ரா செடியவான் ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரனாய், சீனாவின் ஜுன் பெங் ஜாவோ மோதினர். முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய பிரனாய், இரண்டாவது செட்டை 6-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர் 18-21 எனக் கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய பிரனாய் 21-19, 6-21, 18-21 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement