“எடப்பாடி, சசிகலாவுக்கு துரோகம் பண்ணுனத பத்தி கேளு” – அதிமுக தொண்டரிடம் ஆறுக்குட்டி காட்டம்

கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுக்குட்டி . இவர் 2011 முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ வாக பதவி வகித்தார். அதிமுக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணிகளாக பிரிந்த போது முதலில் ஓ.பி.எஸ் அணியில் இருந்து, பின்னர் இ.பி.எஸ் அணிக்குத் தாவினார். கொடநாடு வழக்கு குறித்து ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அதிமுக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதற்கு, `ஆறுக்குட்டி வேடந்தாங்கல் பறவை போல’ என இ.பி.எஸ் விமர்சித்திருந்தார். மேலும், அதிமுக வட்டாரங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முளைந்தன.

தற்போது அதிமுக தொண்டர் நாகராஜூம் ஆறுக்குட்டியும் பேசும் ஆடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த ஆடியோவில் அதிமுக தொண்டர் நாகராஜ், “உங்களுக்காக உயிரைக் கொடுத்துப் பாடுபட்டோம்… உங்களுக்கு ஜெயலலிதா இரண்டு தடவை பதவி கொடுத்து அழகு பாத்தாங்க… ஆனா, ஜெயலலிதாவுக்கு இப்படி துரோகம் பண்ணிட்டீங்களே.. ஜெயலலிதாவுக்கு நயவஞ்சகம் பண்ணிட்டீங்க” எனத் பேசி இருந்தார்

அதற்கு ஆறுக்குட்டி, “என்ன துரோகம் பண்ணிட்டேன். எடப்பாடி, சசிகலாவுக்கு துரோகம் பண்ணுனத பத்தி கேளு” எனக் காட்டமாக பதிலளித்தார். .

இந்த ஆடியோ தொடர்பாக ஆறுக்குட்டியிடம் விளக்கம் கேட்ட போது, “அவர் எனக்கு தெரிந்த நபர் தான். நான் செல்போனில் பேச வேண்டாம், நேரில் பேசிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தேன். அவரை யாரோ தூண்டி விட்டு பேச வைத்திருக்கலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.