கனடாவில் இந்திய தேசிய கொடியில் Made In China என அச்சிட்டு அவமானப்படுத்தப்பட விவகாரம் விஸ்வரூம் எடுத்துள்ளது.
கனடாவின் ஹேலிஃபாக்ஸ் நகரில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபாநாயகர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேரணியில் இந்திய குழுவினர் கையில் ஏந்திச் சென்ற தேசியக் கொடிகள் அனைத்திலும் மேட் இன் சைனா என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்து சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டனர்.
youturn
மேக் இன் இந்தியா என முழங்கி வரும் வேளையில் நம் தேசியக் கொடியில் மேட் இன் சைனா என வாசகம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கொடியில் 100% பாலிசிஸ்டர் எனும் வாசகத்தின் கீழ் ’மேட் இன் சைனா’ என அச்சிடப்பட்டிருந்தது.
இந்தியப் பிரதிநிதிகள் இந்தியாவில் தயாரிக்கப்படாத, சைனாவில் தயாரிக்கப்பட்ட கொடிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என முன்னதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இதற்கு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்மன்ற தலைவருமான செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.