ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த ஜெயலலிதாவின் மரணம் சார்ந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தனது விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்திருக்கிறது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆணையத்தை தொடரலாம் என்று அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், மற்றும் ஓர் ஆண்டுக்குள் அனைவரிடமும் எங்கள் தரப்பில் இருந்து விசாரணை செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
500 பக்கம் ஆங்கிலத்திலும் 608 பக்கம் தமிழிலும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து 158 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினர் எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததில் ஆணையத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்த அவர். அதனால் ஜெயலலிதா இல்லத்திற்ககு சென்று விசாரனை செய்வதற்காக வாய்ப்பு ஏற்ப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், ஆணையம் கால தாமதமாக விசாரிக்கிறது எனக் கூறினார்கள். 149 சாட்சியங்களை ஒரு வருடத்தில் விசாரித்து உள்ளோம். மொத்தமாக 150 நாட்கள் வருடத்தில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். விசாரணைக்கு சசிகலாவை அழைத்தோம், அவர் வரவில்லை எனக் குறிப்பிட்டார். விசாரணைக்கு நேரில் ஆஜராக வற்புறுத்த முடியாது. ஆகையால் பிராமணப் பத்திரம் வாயிலாக தகவல்களை கேட்டு பெற்றோம். நிறைவாக விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும் அறிக்கை குறித்து கேட்கப்பட்டதற்கு, விசாரணை அறிக்கை குறித்த விவரங்களை அரசு தான் வெளியிட வேண்டும். மேலும் என்னால் முடிந்ததை எழுதி உள்ளேன். பெரும்பாலும் சாட்சியங்களின் கருத்துகளை குறிப்பிட்டுள்ளேன் விசாரணைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். கேட்ட கேள்விகளுக்கு போதிய பதில்கள் கிடைத்தன மற்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் அளித்த பதிலை வைத்து இறுதி அறிக்கை அளித்துள்ளேன் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM