பொதுவாக இந்தியாவை பொருத்தவரை திருமணத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செலவு செய்து நடத்தி வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் திருமணத்திற்கு என சிறு வயதிலிருந்தே ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைக்கும் பழக்கம் பெரும்பாலான பெற்றோர்களுக்கு உள்ளது.
இந்த நிலையில் இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் திருமணத்திற்கு தாங்களே பணம் சேர்த்து வைத்து செலவு செய்யும் முறை மாறி வருவதாக தெரியவந்துள்ளது.
திருமண நேரத்தில் திடீரென தொலைந்த மாலை… மணமகளை அசத்திய மாப்பிள்ளையின் செயல்!
ஆடம்பர திருமணம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல துறைகள் பாதிக்கப்பட்ட நிலையில் திருமண சந்தையும் பெருமளவு பாதிக்கப்பட்டது. கொரோனா வைரசால் வேலை இழந்த பலர் திருமணத்தை மிகவும் சிக்கனமாக நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டுள்ள நிலையில் மீண்டும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வருகின்றனர். திருமணத்திற்காக அதிக செலவு செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.
சொந்த செலவில் திருமணம்
பெரும்பாலான இளையதலைமுறையினர் தாங்களே சொந்த செலவு செய்து திருமணத்தை நடத்துகிறார்கள் என்றும் திருமண கட்டணங்களை கையாள்வதில் அவர்கள் தற்போது திறன் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் சர்வே தெரிவித்துள்ளது. மேலும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதிலும் அதே நேரத்தில் பணத்தை சிக்கனப்படுத்துவதிலும் இன்றைய இளைஞர்கள் திறமையாக இருக்கிறார்கள் என்றும் அந்த சர்வே தெரிவித்துள்ளது.
திருமண ஏற்பாட்டாளர்கள்
இந்தியா முழுவதும் தற்போது திருமணத்தை நடத்தி வைக்கும் திருமண ஏற்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இதுகுறித்து ஆய்வில் 170 க்கும் அதிகமான திருமண ஏற்பாட்டாளர்கள் தற்போது இந்தியாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இணையதளங்கள்
திருமண சந்தை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருமணத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கும் வருமானம் அதிகரிக்கிறது. இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் திருமண ஏற்பாட்டாளர்கள் திருமணம் செய்ய விரும்பும் தம்பதிகளை தொடர்புகொண்டு அவர்களுக்கான தேவையான திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முன்பதிவு
மேலும் 44 சதவீத தம்பதிகள் திருமணத்திற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே தங்கள் திருமண ஏற்பாட்டை தொடங்கி விடுவதாகவும், குறிப்பாக 15 சதவீத ஜோடிகள் திருமணத்திற்கு ஒரு மாதங்களுக்கு முன்பே திருமண இடங்களை முன்பதிவு செய்து கொள்கிறார்கள் என்றும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன்
திருமண கட்டணங்களை இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே செலுத்தி விடுகிறார்கள் என்றும் ஆன்லைன் மூலமே அனைத்து தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
திருமண செலவு
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் தற்போது திருமண ஏற்பாடு மற்றும் திருமண செலவை பெற்றோர்கள் தலையில் சுமத்தாமல் திருமணம் செய்து கொள்பவர்களே அனைத்து ஏற்பாட்டையும் செய்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Almost 40% Of Millennial Couples Spending Their Own Money On Wedding!
Almost 40% Of Millennial Couples Spending Their Own Money On Wedding! | சொந்த செலவில் திருமணம்.. இளையதலைமுறையினர்களின் பக்கா பிளான்!