சென்னையில் தனியார் தங்கும் விடுதிக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் பெட்ரோல் குண்டு தயாரிக்க பொருட்கள் வாங்குவது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடபழனியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் அதே பகுதியில் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விடுதியில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விடுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.