சென்னை : த்ரில்லர் கதை என்றாலே இயக்குநர்களுக்கு என் நினைவுதான் வருகிறதா என பேட்டி ஒன்றில் நடிகர் அருள்நிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே கதைகளை மிகவும் நேர்த்தியாகவே தேர்வு செய்து நடிப்பவர் நடிகர் அருள்நிதி. வருடத்தில் ஏதாவது ஒரு படம் கொடுக்க வேண்டும் என நினைக்கும் நடிகர்களின் மத்தியில் இவரும் ஒருவர்.
எத்தனை வருடம் ஆனாலும் மசாலா இல்லாமல் எல்லாமே தரமான கதைகளை கொடுக்க வேண்டும் என நினைத்து தரமான படங்களை கொடுத்து வருகிறார். அதனால்தான் ரசிகர்களின் மனதில் இவருக்கென்று தனி இடம் உண்டு.
அருள்நிதி
வம்சம் தொடங்கி மௌனகுரு, டிமான்டி காலணி, ஆறது சினம் இந்த வருடம் இவருடைய நடிப்பில் ஜூலை மாதம் வெளியான D ப்ளாக், தேஜாவு, அதைத்தொடர்ந்து நேற்று வெளியான டைரி என தொடர்ந்து க்ரைம், த்ரில்லர் ஜனரில் நடித்து வருகிறார் அருள்நிதி. ‘டைரி படம் குறித்து அருள்நிதி பல சுவாரசியமானத் தகவலை பகிர்ந்துள்ளார்.
த்ரில்லர் கதை என்றாலே
கோலிவுட்டில் த்ரில்லர் கதை என்றாலே என் பெயர்தான் இயக்குனர்களுக்கு நினைவு வருகிறது என்ற நினைக்கிறேன். இந்தப்படம் 2019 இல் ஒப்புக் கொண்டது. கொரோனா பிரச்சினை காரணமாக இப்படம் தாமதமாகி இப்போது வெளியாகி உள்ளது. அதன்பின் கமிட்டான படங்கள் தான் டி பிளாக்கும், தேஜாவு வும். இப்போது இந்த படங்கள் வரிசையாக வெளியாகி உள்ளதால், த்ரில்லர் படங்களில் நான் நடிப்பது போல தோன்றுகிறது.
இனிமேல் தவிர்ப்பேன்
இனிமேல் தொடர்ந்து இப்படியான படங்களில் நடிப்பதை தவிர்க்க விரும்புகிறேன். அதேபோல் கதைக்குத் தேவையில்லாமல் புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன், கதைக்கு எது தேவையோ அதை கட்டாயம் செய்வேன் என்றார். மேலும், டைரி படத்திற்கு நல்ல விமர்சனங்களை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
ஹிட் லிஸ்டில்
பைவ் ஸ்டார் கிரியேஷன் எஸ் கதிரேசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ள இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து அருள்நிதியுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். க்ரைம் திரில்லர் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ரான் யோகன். இந்த படமும் அருள்நிதி ஹிட் லிஸ்டில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.