கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் பணியாளர்களை குறைத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி முன்னணி நிறுவனங்கள் புதிய பணியாளர்களை தேர்வு செய்வதை நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அமெரிக்காவிலுள்ள ஹோம்ஓனர்ஷிப் நிறுவனமான Better.com நிறுவனம் ஏற்கனவே 3 முறை ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது நான்காவது முறையும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
3 மாதத்தில் 16% வரை லாபம் கிடைக்கலாம் .. இந்த மினி ரத்னா பங்கு உங்ககிட்ட இருக்கா?
Better.com நிறுவனம்
அமெரிக்காவின் முன்னணி ஹோம் ஓனர்ஷிப் நிறுவனமான Better.com கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜூம் அழைப்பின் மூலம் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதன்பின் இந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த Better.com அதற்கு அடுத்த மாதமே அதாவது ஏப்ரல் மாதத்தில் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. மொத்தம் சுமார் 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து உள்ள Better.com தற்போது நான்காவது முறையாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் பணிநீக்கம்
ஆகஸ்ட் 26 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்படும் சில ஊழியர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை Better.com தயாரித்து இருப்பதாக ஊழியர்கள் மத்தியில் செய்தி கசிந்துள்ளது. இந்த செய்தி ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணி நீக்கம் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறப்படுகிறது.
இந்த முறை எத்தனை பேர்?
முதல்கட்ட பணி நீக்க நடவடிக்கையில் 900 பேர்களும், இரண்டாம், மூன்றாம் கட்ட பணி நீக்க நடவடிக்கையில் 2000 மற்றும் 1000 பேர்களையும் பணிநீக்கம் செய்த Better.com, இம்முறை எத்தனை பேர்களை பணி நீக்கம் செய்ய போகிறது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இருப்பினும் குறைந்தது 250 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் பணி நீக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
விவேகமான முடிவுகள்
இதுகுறித்து Better.com நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘சந்தை இயக்கவியலுக்கு ஏற்ப நாங்கள் விவேகமான முடிவுகளை எடுக்கிறோம் என்றும், இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு சேவை செய்ய முடியும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
பெரும் நஷ்டம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் Better.com அதிக வர்த்தகத்தை பெற்றது என்றும், அதன் காரணத்தால் சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 500 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும் இந்நிறுவனம் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்ததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
For The Fourth Time! Better.com To Layoff Again After Already Firing Around 4,000 Employees
For The Fourth Time! Better.com To Layoff Again After Already Firing Around 4,000 Employees | நான்காம் கட்ட பணிநீக்க நடவடிக்கை.. Better.com சிஇஓவின் அடுத்த அஜூம் கால்?