பெங்களூரு: கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டம், அப்சல்புரா தாலுகா, மல்லாபாத் கிராமத்தில் பாகம்மா பண்டதாள என்பவர், அவருக்கு சொந்தமான வயல் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். பொதுவாக வயல் வெளியில் பாம்புகள் வசிப்பது இயல்பானது. நேற்று காலை பாகம்மா பண்டதாள, வீட்டு வாசலில் இருந்து கயிறு கட்டீலில் படுத்து கொண்டிருந்தார். அப்போது நிலத்தில் இருந்து வந்த நாகபாம்பு ஒன்று, கட்டிலில் படுத்து கொண்டிருந்த பாகம்மா மீது ஏறி அவர் முதுகில் அமர்ந்த படம் எடுத்து நின்றது.
தனது முதுகு மீது பாம்பு இருப்பதை தெரிந்து கொண்ட பாகம்மா, பயம் இருந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல், கடவுளை நோக்கி வேண்டுதல் செய்தார். சில நிமிடம் படம் எடுத்து நின்ற பாம்பு பின் அமைதியாக சென்றுவிட்டது. இதை வீடியோவில் படம் பிடித்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் சமூகவலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.