ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எந்தவொரு அரசியல்வாதியும் 06 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அவரது குடியுரிமை 07 வருடங்களுக்கு ரத்து செய்யப்படும். இருப்பினும், அரசியலமைப்பின் 34 (2) பிரிவின் கீழ் பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், ஜனநாயக உரிமை கிடைத்திருக்கும்.
ஆனால் அரசியலமைப்பின் 34 (1) (ஈ) சரத்தின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்துள்ளது. இதற்கமைவாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 7 வருடகாலத்திற்கு தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது
எனினும், தேவைப்பட்டால் ரஞ்சன் ராமநாயக்கவை தேவைபடும் சந்தர்ப்பத்தில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போது முதலாவது நிபந்தனைக்கு அமைவாக இவ்வாறான நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு பின்னர் பூரண பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.