சேலம்: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 60,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் 60,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 23,000 கன அடியும், 16 கண் பாலம் வழியாக 37,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.