ஆந்திர மாநிலம் சித்தூர் ஸ்ரீ சிட்டி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மற்றும் கணேசன் கண்ணபிரான் ஐஐஐடி ஸ்ரீ சிட்டி சித்தூர் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஸ்ரீ சிட்டி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சித்தூரில் உள்ள ஸ்ரீசிட்டி ஐஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் கலந்துகொண்டு பட்டம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கணேசன் கண்ணபிரான் -ஐஐஐடி ஸ்ரீ சிட்டி சித்தூர் இயக்குநர், எம்.பாலசுப்ரமணியம், ஐஐஐடி ஸ்ரீ சிட்டியின் ஆளுநர் குழுவின் தலைவர், ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் சி ராஜு, தலைவர் ஸ்ரீ சிட்டி லிமிடெட், புவன் ஆனந்தகிருஷ்ணன், இயக்குநர், கேட்டர் பில்லர் டெக்னாலஜி சென்டர்-இந்தியா, சென்னை,செனட் உறுப்பினர் டாக்டர் சந்திர மௌலீஸ்வரன கலந்துகொண்டனர்.
பட்டமளிப்பு நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் பேசுகையில், “பட்டமளிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஸ்ரீ சிட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது இந்திய தேசத்தின் எதிர்காலமான பட்டதாரி இளைஞர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐஐஐடி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்துவதாகவும். நீங்கள் சாதித்தது பட்டம் மட்டுமல்ல, எதிர்காலத்திற்கு தேவையான கற்றல் மற்றும் அனுபவங்களையும் இந்த கல்லூரி வளாகத்தில் நீங்கள் கற்றிருப்பீர்கள் இந்த அனுபவம் தங்களின் வருங்கால வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஐஐஐடி ஸ்ரீ சிட்டி ஆராய்ச்சி மேம்பாடு, புதுமை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஊக்குவிக்கவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல பரிமாண கற்றல் வாய்ப்புகளை வழங்கவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.
தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது புதிய கல்வித் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது, உள்நாட்டில் உள்ள திறன்களை மேம்படுத்துவதன் கற்றலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே புதிய கல்விக் கொள்கை மூலம் பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் பங்களிக்க உங்களுக்குப் பல வாய்ப்புகள் இருக்கும். இதன் மூலம், பரந்த அளவிலான சிக்கலான சவால்களைச் சந்திக்கவும் தீர்க்கவும் தேசத்தை தயார்படுத்துவதற்கு நீங்கள் உதவலாம். இந்தியா மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் திறன் கொண்டது. மாணவர்கள் சுற்றுச்சூழல் துறையையும், ரோபோட்டிக்ஸ் மற்றும் பிற புதுமைத் துறைகளையும் ஆராய வேண்டும்” என்றார்.