லண்டனுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம் தெரியுமா..?

பணவீக்கத்தாலும், எரிவாயு மற்றும் எரிபொருள் விலை உயர்வாலும், அரசியல் பிரச்சனைகளாலும் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வேளையிலும் இந்தியர்கள் அந்நாட்டுக்குச் சாரை சாரையாகப் படையெடுத்து வருகின்றனர்.

இந்தியர்கள் மத்தியில் பிரிட்டன் இன்னும் விரும்பத் தக்க இடமாகவே உள்ளது என்றால் மிகையில்லை, குறிப்பாகப் படிக்கவும், பணியாற்றவும், சுற்றுலா செல்லவும் பிரிட்டன் செல்லும் இந்திய மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் முதலீட்டுக்கு இந்தியர்கள் செல்லும் இடம் வேறு.

அப்படி எத்தனை இந்தியர்கள் பிரிட்டன் நாட்டுக்கு சென்றுள்ளனர்..? அரசு தரவுகள் கூறுவது என்ன..?

வெறும் ரூ.50ல் ஆரம்பித்த வணிகம்.. லட்சங்களில் வருமானம்.. லண்டன் வரை ஏற்றுமதி செய்யும் மீனாட்சி!

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டன் நாட்டின் குடிவரவு புள்ளிவிவரங்கள் படி ஜூன் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் ஸ்டூடென் விசா மூலம் சுமார் 1,18,000 பேர் பிரிட்டன் நாட்டுக்குச் சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது சுமார் 89 சதவீதம் அதிகமாகவும்.

மாணவர்கள் விசா பிரிவு

மாணவர்கள் விசா பிரிவு

இது மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கான விசா பிரிவில் இந்த ஆண்டுச் சீனா-வை இந்திய முந்தியுள்ளது என்றால் மிகையில்லை. அமெரிக்காவிலும் சரி, பிரிட்டனிலும் சரி வெளிநாட்டில் இருந்து குடியேரும் மக்களின் எண்ணிக்கை சீனா மற்றும் இந்தியாவில் இருந்து தான் அதிகமாக இருக்கும்.

 வொர்க் விசா
 

வொர்க் விசா

இந்த வகையில் இதே ஜூன் 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1,03,000 பேர் பிரிட்டன் நாட்டுக்கு வொர்க் விசா அதாவது வேலைபார்ப்பதற்காக விசா பெற்றுள்ளனர். இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 148 சதவீதம் அதிகமாகும். மேலும் அந்நாட்டில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்காக அளிக்கப்படும் விசாவில் 46 சதவீதம் இந்தியர்களுக்கானது.

அலெக்ஸ் எல்லிஸ்

அலெக்ஸ் எல்லிஸ்

“மீண்டும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. ஜூன் 2022 இல் முடிவடைந்த ஆண்டில் இந்திய நாட்டினருக்கு அதிக எண்ணிக்கையிலான இங்கிலாந்து படிப்பு, வேலை மற்றும் பார்வையாளர் விசாக்கள் வழங்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் மக்களை இணைக்கும் தனித்துவமான வாழ்க்கைப் பாலத்திற்கு மேலும் வலு சேர்க்கும்” என இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் கூறினார்.

 விசிட்டர் விசா

விசிட்டர் விசா

மேலும் சுற்றுலாவுக்காகவும், பிரிட்டன் நாட்டில் இருக்கும் குடும்பத்தைப் பார்க்கவும் வெளிநாட்டவர்களுக்காகவும் அளிக்கப்படும் விசிட்டர் விசா எண்ணிக்கையில் மொத்தத்தில் 28 சதவீதம் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஜூன் வரையிலான காலகட்டத்தில் 258,000 பேருக்கு விசிட்டர் விசா வழங்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 630 சதவீதம் அதிகமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indians going to United Kingdom like never before

Indians going to United Kingdom like never லண்டனுக்குப் படையெடுக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம் தெரியுமா..?

Story first published: Saturday, August 27, 2022, 13:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.