ஏறக்குறைய 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு இறுதியாக இடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
நொய்டாவின் செக்டார் 93A-ல் உள்ள Suptertech நிறுவனத்தின் 40 மாடி இரட்டைக் கோபுரங்களான Apex மற்றும் Ceyane கட்டிடத்தை ஆகஸ்ட் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முக்கிய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த 40 மாடி கட்டிம் இடிந்து விழும் காட்சியைப் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது.
Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
Suptertech நிறுவனம்
Suptertech நிறுவனத்தின் 40 மாடி இரட்டைக் கோபுரங்களை இடிக்க மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் சூப்பர்டெக் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் இடிக்கப்படும் மிக உயரமான கட்டிடம் இது என்பதால் மக்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்துள்ளது.
இரட்டைக் கோபுரங்கள்
இதேபோல் இந்த இரட்டைக் கோபுரங்களில் இடிக்கத் துளையிடப்பட்டுச் சுமார் 3,700 கிலோகிராம் அளவிலான வெடிபொருட்கள் அடைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளில் சுமார் 100 பேர் தினமும் பணியாற்றி வந்தனர்.
கட்டிட கழிவுகள்
இதன் மூலம் மொத்த கட்டிடமும் வெறும் 9 நொடிகளில் தரைமட்டம் ஆகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இடிக்கப்பட்ட பின்பு கட்டிட கழிவுகள் மட்டும் சுமார் 15 மீட்டர் உயரத்திற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
54000 டன்
இந்தக் கட்டிட கழிவுகளின் மொத்த எடை 54000 டன்களாகும், இதை முழுமையாக அப்புறப்படுத்த 3 மாதங்கள ஆகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் கட்டிடம் waterfall implosion முறையில் வீழ்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நொய்டா
உத்திரபிரதேச மாநிலத்தின் முக்கிய வர்த்தகப் பகுதியாக விளங்கும் நொய்டாவில் உள்ள 40 மாடிகளைக் கொண்ட சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்களை இடிக்கும் பணிக்கான ஆயத்தப் பணிகளுக்காகச் சுமார் 600 போலீஸார், போக்குவரத்துப் பணியாளர்கள் உட்படச் சட்டம்-ஒழுங்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 28 – மதியம் 2.30 மணி
இந்த இரட்டைக் கோபுரங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி குறித்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு இடிக்கப்பட உள்ளன. சுமார் 400 போலீசாரும், 150 முதல் 200 போக்குவரத்து பணியாளர்களும் ஒரு நாள் முழுவதும் இப்பணியில் இருப்பார்கள்.
5,000 பேர்
இரட்டை கோபுரங்களுக்கு அருகாமையில் உள்ள எமரால்டு கோர்டு மற்றும் ஏடிஎஸ் வில்லேஜ் வசிக்கும் சுமார் 5,000 பேர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிசிபி ராஜேஷ் எஸ் கூறினார்.
3,000 வாகனங்கள்
எமரால்டு கோர்டு மற்றும் ஏடிஎஸ் வில்லேஜ்-ல் இருக்கும் கிட்டத்தட்ட 3,000 வாகனங்களைக் காலையில் அகற்றப்படும், மேலும் மாலை 4 மணியளவில் பாதுகாப்பு அனுமதிக்குப் பின்னரே மக்கள் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
600 காவல் அதிகாரிகள்
ஆறு ஆம்புலன்ஸ்கள், நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் NDRF மற்றும் துணை ராணுவக் குழுக்களைத் தவிர 400 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Noida Supertech twin towers demolition time and date: August 28 2.30PM and All others need to know
Noida Supertech twin towers demolition time and date: August 28 2.30PM and All others need to know வெறும் 9 நொடி.. 40 மாடி கட்டிடம் தரைமட்டமாகும்: Supertech twin towers