நாகப்பட்டினம்: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பக்தர்கள் பங்களிப்பு இல்லாமல் நடைபெற்ற வேளாங்கண்ணி திருவிழா இந்தாண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருக்க கூடிய ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தினுடைய ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
குறிப்பாக, கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த திருவிழா, இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என பேராலயம் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக இந்த வருடம் வழக்கமாக நடைபெற கூடிய பேராலய நிர்வாகத்துடைய ஆண்டு திருவிழா வருகிற 29ம் தேதி அதே உற்சாகத்துடன் தொடங்க உள்ளது. திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார்கள்.
குறிப்பாக, வேளாங்கண்ணி பேராலயம் வெறிசோடி காணப்பட்ட நிலையில், இந்த வருட திருவிழாவில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணி முகப்பு பகுதி, கடற்கரை சாலை, கடைவீதி, பெரியக்கடை தெரு மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் பேராலய நிர்வாகம் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களோடு பங்கேற்கலாம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளதால் மாவட்ட காவல்துறை சார்பாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் அனைத்து ஏற்பாடுகளையும் பேராலய நிர்வாகத்தோடு இணைந்து செய்துள்ளனர். குறிப்பாக, பொது சுகாதாரத்துறை சார்பாக பக்தர்களுக்கு கழிவறை வசதிகள் முதல் தங்கும் இடவசதி வரை அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை சார்பாக 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, கடற்கரை பகுதிக்கு குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த திருவிழா இந்த வருடம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சாலை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, பேராலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.