விழுப்புரம்: கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஜிப்மர் மருத்துவர் குழுவின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம்வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி உயிரிழந்தார். இதனை அந்த பள்ளி நிர்வாகம் தற்கொலை என பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அது தற்கொலை அல்ல, இந்த மரணத்தில் மர்மம் உள்ளது உள்ளது என பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த ஜூலை 17-ம் தேதி மிக பெரிய கலவரமாக வெடித்தது.
இதனை தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணையானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்குகள் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் முதல் பிரேத பரிசோதனையானது மாணவி உயிரிழந்த அன்று நடைபெற்றது. ஆனால் அந்த பிரேத பரிசோதனையானது மருத்துவ நிபுணர்களை கொண்டு நடத்தப்படவில்லை, சாதாரண மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட்டதால் அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் மறுபிரேத பரிசோதனை செய்யவேண்டும், அதில் தங்கள் தரப்பு மருத்துவர்களையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்து உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீமதியின் உடலை மருத்துவ நிபுணர்களை கொண்டு 2-வது பிரேத பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த அந்த பிரேத பரிசோதனையில் ஸ்ரீமதியின் உறவினர்கள் உடனிருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் உறவினர்கள் மேல்முறையீடு செய்தனர். அதனால், அந்த பரிசோதனையின் போது ஸ்ரீமதியின் உறவினர்கள் கலந்து கொள்ளாததால், மருத்துவ நிபுணர்கள் கொண்டு செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2 பிரேத பரிசோதனைகளையும் ஜிம்பர் மருத்துவ குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான ஜிம்பர் மருத்துவ குழுவினர் 3 பேர் அமைக்கப்பட்டனர். ஜிம்பர் மருத்துவ குழுவினர் ஆய்வறிக்கையானது விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.