30,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த விமானி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து விமான பயணிகள் அச்சம் அடைந்தனர் என்பதும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அந்த விமானம் 8 மணி நேரம் தாமதமாக பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.9ல் விமான டிக்கெட்டா.. நம்மூரில் ஒரு குச்சி ஐஸ் கூட வாங்க முடியாதே..!
இங்கிலாந்து – துருக்கி விமானம்
ஆகஸ்ட் 23-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிலிருந்து துருக்கி சென்ற ஜெட்2 விமானம் ஒன்று 30,000 அடி உயரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானத்தை ஓட்டிய விமானி மயங்கி விழுந்தார். இதனையடுத்து அந்த விமானத்தின் முன்புறத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
விமானி மயக்கம்
இதனை அடுத்து ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை பயணிகள் முதலில் அறிந்து அச்சப்பட்டனர். அதன்பின்னர் பயணிகளுக்கு, விமான பணியாளர்கள் ‘விமானி மயங்கி விழுந்து விட்டதாகவும் இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட உள்ளதாகவும் கூறினர்.
பயணிகள் அச்சம்
இதைக்கேட்ட பயணிகள் அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். இதுகுறித்து பயணி ஒருவர் தெரிவித்த போது நாங்கள் அனைவரும் உட்கார்ந்து இருந்த போது விமானத்தின் முன் புறத்தில் ஏதோ நடந்து கொண்டிருப்பதை அச்சத்துடன் கவனித்தோம்.
மருத்துவ சிகிச்சை
இதனை அடுத்து என்ன நடந்தது என்று நாங்கள் கொந்தளிப்புடன் கேட்டபோது மிகவும் தயங்கியபடியே பணியாளர்கள் நடந்ததை கூறினர். விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த விமானி திடீரென மயங்கி விட்டதாகவும் அவருக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே விமானத்தை உடனடியாக கிரீஸ் நாட்டில் தரை இறக்க அனுமதி பெற்று உள்ளதாகவும் தெரிவித்தனர். இதன் காரணமாக நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்தோம் என்று கூறியுள்ளார்.
மாற்று விமானி
கிரீஸ் நாட்டில் விமான நிலையத்தில் நாங்கள் இறங்கிய உடன் எங்களை யாரும் கவனிக்காததால் நாங்கள் அனைவரும் விரக்தி அடைந்தோம் என்று விமான பயணிகளில் ஒருவர் கூறினார். இதனை அடுத்து 8 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் மாற்று விமானி மூலம் கிளம்பியது என்று பயணிகள் தெரிவித்தனர்.
விளக்கம்
இதுகுறித்து விமானத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் விளக்கமளித்தபோது, ‘ஆகஸ்ட் 23-ஆம் தேதி சென்ற ஜெட்2 விமானத்தின் விமானிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரீஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்பட்டு விமானம் மீண்டும் துருக்கி சென்றது என்று கூறினார். மேலும் தாமதத்திற்காக ஒவ்வொரு பயணிக்கும் இழப்பீடு கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Panic on Jet2 flight after pilot faints at 30,000 feet
Panic on Jet2 flight after pilot faints at 30,000 feet | 30,000 அடி உயரத்தில் விமானம்.. திடீரென விமானி மயக்கம்.. அப்புறம் நடந்தது என்ன?