5G அலைவரிசை இந்திய குடிமக்களின் வாழ்க்கைமுறை, தொழில்நுட்ப வளர்ச்சி என பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த காத்திருப்பதாக புகழாரம் சூட்டுகின்றனர். வேகத்தை பொறுத்தே வாழ்க்கையின் முன்னேற்றமும். அது போல 5G நெட்வொர்க்கின் வேகம் இந்திய துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்னதான் இருக்கிறது 5Gயில்?
1Gயின் டேட்டா வேகமான 2.4 KB/sத்தை விட 5Gயின் வேகம் 8.3 மில்லியன் மடங்கு அதிகம். 5Gயின் டேட்டா வேகம் 20 GB/s. 4Gயை விட 1000 மடங்கு திறன் கொண்டது 5G4G கட்டளையை ஏற்று செயல்படுத்த 200 மைக்ரோ நொடிகள் ஆகும். ஆனால் 5G க்கு 1மைக்ரோ நொடியே அதிகம் என்று கூறப்படுகிறது.5G நெட்வொர்க்கால் ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மில்லியன் டிவைஸ்களோடு இணைய முடியும்.4G நெட்வொர்க்கை விட 20 மடங்கு அதிவேகமாக 5Gயால் டவுன்லோட் செய்ய முடியும்.அதன் டவுன்லோட் வேகம் 87.5 MB/s. அதாவது 3GB இருக்க கூடிய ஒரு முழு படத்தை வெறும் 35 நொடிகளில் உங்களால் டவுன்லோட் செய்ய முடியும்.5G சேவை மூலம் நம்மால் தானியங்கி கார்கள் மற்றும் டெலி-சர்ஜெரி போன்றவற்றை நிறுவ முடியும்.5G சேவையை பயன்படுத்தி மருத்துவ மாணவர்கள் Virtual முறையில் அறுவை சிகிச்சை பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.மருத்துவ துறையில் சோதனைகள் செய்வது முதல் முடிவுகளை பெறுவது வரை மிக துல்லியமாகவும், வேகமாகவும் செயல்பட வலி வகுக்கும். இதன் மூலம் பலரின் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பல உயிர்களை காப்பாற்றலாம்.தொழில்துறைகளில் நம்ப முடியாத மாற்றத்தை ஏற்படுத்த 5G நெட்வொர்க் காத்து கொண்டிருக்கிறது. இந்தியா டிஜிட்டல்மயமாக மாற முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 5G அதற்கான முக்கிய உந்து சக்தியாக இருக்கும்.விவசாய துறையில் மனிதர்களுக்கு மாற்றாக இயந்திரங்களை பயன்படுத்தி மனித வேலையை சுலபமாக்க, வானிலை நிலவரங்களை மிக துல்லியமாக கண்டறிந்து தேவையில்லாமல் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கவும் இது உதவும்.
இன்னும் ஏராளமான பயன்களை 5G சேவை வழங்க இருக்கிறது. மேலதிக தகவல்களுடன் அடுத்த கட்டுரையில் இணைவோம். உங்களுக்கு 5G குறித்த சந்தேகங்கள், கருத்துகள் இருந்தால் கருத்து பெட்டியில் பதிவிடவும்.
– சுபாஷ் சந்திரபோஸ்