இந்தியாவுக்கு முன்பே பல்வேறு நாடுகள் 5G தொழில்நுட்பத்தை டெலிகாம் துறையில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நம்மை விட அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியில் வெகுதொலைவு முன்னாள் உள்ளனர்.
ஆனால் தற்போது இந்தியாவில் அறிமுகப்போகும் 5G தொழில்நுட்பம் அந்த ஓட்டத்தில் நம்மையும் முன்னுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரத்தில் மட்டும் 5G தொழில்நுட்பம் 450பில்லியன் டாலர் அளவிற்கு பங்காற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எந்த நாடுகளில் 5G சேவை உள்ளது?
முதன்முதலில் 5G சேவையை பயன்படுத்த துவங்கிய நாடு தென்கொரியா ஆகும். தற்போது சீனா, அமெரிக்கா,பிலிப்பைன்ஸ் , தென் கொரியா , கனடா,ஸ்பெயின்,இத்தாலி,ஜெர்மனி, இங்கிலாந்து , அரேபிய நாடுகள் உட்பட 72க்கும் மேற்பட்ட நாடுகளில் 5G சேவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. தற்போது இந்த வரிசையில் இந்தியாவும் இணைய இருக்கிறது.
பல்வேறு தரவுகளின் அடிப்படையில்மொபைல் மூலமாக 2026ஆம் ஆண்டுக்குள் வட அமெரிக்காவில் 80% 5G பயன்பாட்டாளர்களும், 66% வடக்கு ஆசிய பயன்பாட்டாளர்களும், 66% தெற்கு ஆசிய பயன்பாட்டாளர்களும், 65% மேற்கு ஐரோப்பிய பயன்பாட்டாளர்களும், 35% கிழக்கு மாற்று மத்திய ஐரோப்பிய பயன்பாட்டாளர்களும் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தற்போது உலகத்தில் ஏற்றுமதி செய்யப்படும் மொபைல் போன்களில் 40%-50% 5G தொழில்நுட்பம் கொண்டவை தான்.
2025 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் 2.7 பில்லியன் மக்கள் 5G பயன்பாட்டாளர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக ஒட்டுமொத்த 5G பயன்பாட்டாளர்களில் அதிகமானோர் வடகிழக்கு ஆசியா, வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளை சார்ந்தவர்கள் ஆவர்.
உலக 5G சந்தை மதிப்பு 2028ஆம் ஆண்டுக்குள் 664.75 பில்லியன் டாலரை எட்டலாம் என கணிக்கப்படுகிறது.
இதுதான் உலகின் வேகமான அலைக்கற்றையா?
5G சேவையே முழுமையாக அறிமுகமாகாத இதே நேரத்தில் 6G குறித்தான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சீனா ஏற்கனவே அதற்கான சோதனை செயற்கைக்கோளை ஏவி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உலக அளவில் 2030 ஆம் ஆண்டுக்குள் 6G தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த நகரங்களுக்கு முதலில் 5G ?
ஏற்கனவே இந்தியாவில் சில முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 5G சேவையை 1000த்திற்கும் மேற்பட்ட ஊர்களில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டமிடல்களை உருவாக்கி வைத்துள்ளனர். ஆனால், முதற்கட்டமாக 13 நகரங்களில் 5G சேவை வர இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அதில், அகமதாபாத், சண்டிகர், டெல்லி, ஜாம்நகர்,மும்பை, கொல்கத்தா,சென்னை, குறுகிராம், ஹைதராபாத்,லக்னோ காந்திநகர், புனே ஆகிய நகரங்கள் அடங்கும்.
– சுபாஷ் சந்திரபோஸ்