இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்குப் பின்பு மிகப்பெரிய இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் ஒப்பந்தமாக எஸ்ஸார் குழுமம் தனது மிகப்பெரிய துறை மற்றும் இதர பல சொத்துக்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் முக்கியமான வர்த்தகத்தை இந்தியாவில் கைப்பற்றித் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் குழுமம் மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
பணியாளர்களின் சம்பள விவகாரம்.. ஏர் இந்தியா எடுத்த அதிரடி முடிவு!
எஸ்ஸார் குழுமம்
எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான சில துறைமுகங்கள் மற்றும் மின் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல்
இந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் “மிகப் பெரிய தொற்றுநோய் பிந்தைய இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்” ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. எஸ்ஸார் குழுமம் மற்றும் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் நிறுவனம் சுமார் 2.4 பில்லியன் டாலர் (ரூ. 19,000 கோடி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
LNG முனையம்
இந்த ஒப்பந்தம் மூலம் குஜராத் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 MTPA LNG முனையத்தை எஸ்ஸார் குழுமம் மற்றும் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் 50:50 கூட்டணியில் அமைக்க உள்ளது.
எஸ்ஸார் போர்ட்ஸ் & டெர்மினல்ஸ்
இந்த ஒப்பந்தத்தின் மூலம், எங்களின் முதலீடுகளுக்குப் பல மடங்கு லாபம் கிடைக்கும், எஸ்ஸார் போர்ட்ஸ் & டெர்மினல்ஸ் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் உண்மையான பலன்களை அளிக்க உள்ளது. மேலும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புதிய மற்றும் நவீன அடிப்படை கட்டமைப்புச் சொத்துக்களை உருவாக்குவதில் தொடர்ந்து நிறுவனம் கவனம் செலுத்தும் என்று எஸ்ஸார் போர்ட்ஸ் & டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ரேவந்த் ரூயா கூறினார்.
கடன்
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரூயா நடத்தும் எஸ்ஸார் நிறுவனம் அதன் திட்டமிட்டபடி சொத்துக்களைப் பணமாக்கும் பணிகளை முடித்துள்ளது. மேலும் இந்திய வங்கித் துறையில் வைத்திருந்த $25 பில்லியன் (ரூ. 2,00,000 கோடி) கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
Essar Group – ArcelorMittal Nippon Steel deal; Essar signs $2.4 billion deal to sell ports, infra assets
Essar Group – ArcelorMittal Nippon Steel deal; Essar signs $2.4 billion deal to sell ports, infra assets | Essar Group: ரூ.19000 கோடி சொத்துக்கள் விற்பனை.. வாங்குவது யார் தெரியுமா..?