இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நிதி பற்றாக்குறை காரணமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்த நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் அதிகம் வர்த்தகம் இல்லாத மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத வர்த்தகப் பிரிவுகளை மூடி வருகிறது.
உதாரணமாக ஓலா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத காரணத்தால் இரு வர்த்தகப் பிரிவுகளை மூடி பெருமளவிலான தொகையைச் சேமித்தது. இந்த வரிசையில் தற்போது இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் வர்த்தகத் தளமாக Meesho இணைந்துள்ளது.
Meesho எடுத்த முடிவால் ஒரு வர்த்தகப் பிரிவு மூடப்பட்டது மட்டும் அல்லாமல் 300 பேர் வேலைவாய்ப்பையும் இழந்துள்ளனர்.
உலகில் 50% நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய முடிவு.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
ஆன்லைன் மளிகை பொருட்கள்
இந்தியாவில் தற்போது வேமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கியமான வர்த்தகப் பிரிவாக ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகப் பிரிவு தான். இத்துறையில் இறங்க திட்டமிட்டு பல நிறுவனங்கள் கூட்டம் கூட்டமாகக் குதித்தது. ஆனால் பலரும் தோல்வியை அடைந்தனர், அதில் மீஷோ-வும் ஒன்று.
மீஷோ – SuperStore
மீஷோ மளிகை பொருட்கள் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரிவு தான் SuperStore. இந்தியாவில் பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 90 சதவீத இடங்களில் மூடியுள்ளது. இதன் விளைவாக ஏகப்பட்ட பணிநீக்கம்.
சூப்பர்ஸ்டோர் வர்த்தகம்
மீஷோ தற்போது தனது சூப்பர்ஸ்டோர் வர்த்தகத்தை நாக்பூர் மற்றும் மைசூர் பகுதிகளைத் தவிர அனைத்து இடத்திலும் மூடுவதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக 300க்கும் அதிகமாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஏப்ரல் மாதம் தான் மீஷோ farmiso என்று இருந்த பெயரை சூப்பர்ஸ்டோர் ஆக மாற்றியது.
300 பேர் பணிநீக்கம்
இதே மாதத்தில் 150 பேரை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது மொத்தமாகச் சூப்பர்ஸ்டோரின் 90 சதவீத வர்த்தகத்தை மூடி சுமார் 300க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் சூப்பர் ஸ்டோர் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வைத்திருந்தது.
Meesho closing his Superstore grocery business in India, 300 employees layoff
Meesho closing his Superstore grocery business in India, 300 employees layoff | Meesho கொடுத்த அதிர்ச்சி.. 300 ஊழியர்கள் பணிநீக்கம்..!