கடந்த வாரம் நடந்த அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் மிக முக்கியமான ஒன்றாக முதலீட்டாளர்கள் மத்தியில், கண் கொத்தி பாம்பாக கவனத்தில் இருந்து வந்தது. இதனால் சந்தையில் பெரும் தாக்கம் இருக்கலாம் என்றும் எதிபார்க்கப்பட்டது.
அதனைபோலவே அமெரிக்காவின் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு சில இறுக்கமான பணவியல் கொள்கைகள் தேவைப்படும் என ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் கூறியுள்ளார்.
இது வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது, வட்டி விகிதத்தினை அதிகரிக்க கூடும் என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவே உள்ளது.
இந்திய நிறுவனங்கள் தடையை மீறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. அமெரிக்கா அதிகாரி பலே!
8 நிமிட உரையால் வீழ்ச்சி
இதன் படி வரவிருக்கும் கூட்டத்தில் 50 – 75 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இத்தகைய முடிவால் பொருளாதார வளர்ச்சியில் சரிவு இருக்கலாம். வேலை வாய்ப்பு சந்தை என்பது சரிவினைக் நோக்கி செல்லலாம். மொத்தத்தில் மந்த நிலை மேலும் விரிவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெரோம் பவலின் இந்த 8 நிமிட உரையால் அமெரிக்க சந்தைகள் கடும் சரிவினைக் கண்டன. இதனால் பல முன்னணி நிறுவன பங்குகள் கடும் இழப்பினை சந்தித்தன. இதன் எதிரொலி வரும் திங்கட்கிழமையன்று இந்திய சந்தையிலும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
8 நிமிடங்களில் 78 பில்லியன் அவுட்
பவலின் இந்த 8 நிமிட உரையால் அமெரிக்காவின் ஃபார்ச்சூன் பில்லியனர்களின் சொத்து மதிப்பு, சில நிமிடங்களில் 78 பில்லியன் டாலர் காணமல் போயுள்ளது.
இதில் அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியளரான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு மட்டும் 5.5 பில்லியன் டாலர் சரிவினைக் கண்டுள்ளது.
மற்றவர்களின் சொத்து மதிப்பு
இதே ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு 6.8 பில்லியன் டாலர் சரிவினைக் கண்டும், பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 2.2 பில்லியன் டாலரும், வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டாலரும் வீழ்ச்சி கண்டுள்ளது.
மோசமான வீழ்ச்சி
அமெரிக்க மத்திய வங்கியின் இந்தகைய அறிவிப்புக்கு மத்தியில் எஸ் & பி 3.4% சரிவினைக் கண்டு காணப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் முன்னனி டெக் நிறுவனங்களாக மைக்ரோசாப்ட், அமேசான் இன்க், டெஸ்லா இன்க், ஆல்பாஃபெட் உள்ளிட்ட நிறுவனங்கள் 4% மேலாக வீழ்ச்சி கண்டு காணப்பட்டன.
மோசமான நிலை
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் உலகின் 500 பில்லியனர்களின் சொத்து மதிப்பு 1.4 டிரில்லியன் டாலரை இழந்துள்ளனர். இது இது வரை இல்லாத அளவு ஒரு பெரும் சரிவாகும். கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்க பங்குகள் நவம்பர் 2020-க்கு பிறகு வலுவான வளர்ச்சியினை பதிவு செய்தன. ஆனால் நடப்பு மாதத்தில் அது கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
நிறுவனங்கள் தாக்கம்
கொரோனா உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில், ஏற்கனவே வளர்ச்சி தடை பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மந்த நிலையும் சேர்ந்து கொண்டுள்ளது. இப்படி பல சவாலான கட்டத்தில் வட்டி விகிதமும் அதிகரித்தால், அது நிச்சயம் நிறுவனங்களின் வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
இந்தியா முதலீட்டாளர்களுக்கும் பிரச்சனை
கடந்த அமெரிக்காவில் அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட இந்த தாறுமாறான சரிவின் மத்தியில், இது நாளை இந்திய சந்தையிலும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். இதன் காரணமாக இந்திய சந்தையில பலத்த ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளார்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
US jerome powell’s 8 min speech erases $78 billion from richest Americans: why Indian investors should be aware
பவலின் இந்த 8 நிமிட உரையால் அமெரிக்காவின் ஃபார்ச்சூன் பில்லியனர்களின் சொத்து மதிப்பு, சில நிமிடங்களில் 78 பில்லியன் டாலர் காணமல் போயுள்ளது.