இலங்கை அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்ததாக சனத் ஜெயசூரியா கருத்து
ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே படுதோல்வியடைந்த இலங்கை அணி
இலங்கை அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்ததாகவும், வலுவாக அடுத்தப் போட்டியில் திரும்பி வருவார்கள் எனவும் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரர்கள் நிசங்கா 3 ஓட்டங்களிலும், குசால் மெண்டிஸ் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பனுகா ராஜபக்சே அதிரடியாக 38 ஓட்டங்கள் எடுத்தார். கருணரத்னே 31 ஓட்டங்கள் எடுத்தார்.
ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 105 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தொடக்க போட்டியிலேயே இலங்கை அணி படுதோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூரியா தனது பதிவில், ‘இலங்கை அணியின் தொடக்க ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. எனினும், அடுத்த ஆட்டத்தில் மீண்டும் ஒருங்கிணைந்து வலுவாக வருவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். எப்போதும் இறுதிவரை போராடுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.
Disappointing opening performance by Sri Lanka . I am sure the boys will regroup and come back stronger in the next game. Always fight to the end. #AsiaCup2022
— Sanath Jayasuriya (@Sanath07) August 27, 2022