சீன உளவுக் கப்பலான யுவான் வாங் -5 இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு அண்மையில் வந்து சென்றது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ஒரு வார காலம் இலங்கையில் இருந்த சீன கப்பல் கடந்த 22 ஆம் தேதி சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் சீன உளவுக் கப்பலை இலங்கைக்கு வர வேண்டாம் என்று இந்தியா வலியுறுத்தியதை, இலங்கைக்கான சீன தசதர் ஜென் ஹோங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில், ‘ பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறி சிலர் ஆதாரம் இல்லாமல் இலங்கை உள் விவகாரங்களில் தலையிட்டு வருகின்றனர். இலங்கையின் சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் நோக்கில் அதன் மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை சில நாடுகள் கூறி வருகின்றன. இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீதான மீறல்களை சீனா பொறுத்து கொள்ளாது’ என்று சீன தூதர் தமது கட்டுரையில் இந்தியாவை காட்டமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் மின் கட்டண உயர்வு…! – தனியார்மயத்தால் ஏற்பட்ட பாதிப்பு..?
. சீன தூதரின் இந்த விமர்சனத்துக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ‘ இந்தியா குறித்த சீனத் தூதரின் கருத்து அவரது நாடு எப்படி நடந்து கொள்கிறது என்பதை பிரதிபலிப்பதாக இருக்கலாம். ஆனால் இந்தியா அப்படி இல்லை என்பதை அவருக்கு நாங்கள் தெளிப்படுத்த விரும்புகிறோம். ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி கப்பலின் வருகையுடன் பூகோள அரசியல் சூழலை பொருத்தும் அவரது சீன தூதரின் அணுகுமுறை பாசாங்கான செயலாக தோன்றுகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு தற்போதைய தேவை ஆதரவும், உதவியுமே தவிர, தேவையற்ற அழுத்தங்களோ, சர்ச்சைகளோ அல்ல. பெரிய நாடுகளின் கடன்களை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகள் சிறிய நாடுகளுக்கு மிகவும் பெரிய சவாலாக மாறி வருகின்றது’ என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.