ஐபிஎல் முதல் ஐசிசி போட்டிகள் வரை…நான்கு ஆண்டுகளுக்கு ஏல உரிமை கைப்பற்றியது டிஸ்னி ஸ்டார்




Courtesy: REUTERS

ஐசிசி நிகழ்வுகளை 2027 வரை ஒளிப்பரப்ப இருக்கும் டிஸ்னி ஸ்டார் நிறுவனம்.


ஜூன் மாதத்தில் தொடங்கிய டெண்டர், ஏலம், மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகள்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிகழ்வுகளை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் 2027ம் ஆண்டு வரை உரிமம் பெற்றதை தொடர்ந்து, ஆண் மற்றும் பெண்கள் உலகளாவிய போட்டிகளை டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் ஒளிபரப்பும் என்று விளையாட்டு நிர்வாகக் குழு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

விளையாட்டு போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமம் தொடர்பாக ஜூன் மாதத்தில் டெண்டர், ஏலம் மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகள் தொடங்கியது.

இதுத் தொடர்பாக ஐசிசி ( ICC) வெளியிட்ட அறிக்கையில், டிஸ்னி ஸ்டார் ஏல- செயல்முறையை தொடர்ந்து உரிமைகளை வென்றது, இது முந்திய சுழற்சியில் இருந்து உரிமைக் கட்டணத்தில் இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் முதல் ஐசிசி போட்டிகள் வரை...நான்கு ஆண்டுகளுக்கு ஏல உரிமை கைப்பற்றியது டிஸ்னி ஸ்டார் | Disney Star To Broadcast Icc Events In India2027

அத்துடன் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஐசிசி கிரிக்கெட்டின் தாயகமாக டிஸ்னி ஸ்டாருடன் (Disney Star) தொடர்ந்து பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் உறுப்பினர்களுக்கு சிறந்த முடிவுகளை அளித்துள்ளது மற்றும் எங்கள் லட்சிய வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கும் என்று ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.


கூடுதல் செய்திகளுக்கு: கடலுக்கடியில் கண்ணிவெடிகளை அகற்றும் ஆளில்லா ட்ரோன்கள்: உக்ரைனுக்கு வாரிவழங்கிய பிரித்தானியா!

மேலும் ஜூன் மாதத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் 235.75 பில்லியன் இந்திய ரூபாய்களுக்கு ($3 பில்லியன்) பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி 20 போட்டிக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னிக்கு சொந்தமான ஸ்டார் இந்தியா தக்கவைத்துக் கொண்டது. 

ஐபிஎல் முதல் ஐசிசி போட்டிகள் வரை...நான்கு ஆண்டுகளுக்கு ஏல உரிமை கைப்பற்றியது டிஸ்னி ஸ்டார் | Disney Star To Broadcast Icc Events In India2027REUTERS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.