கோவை மாவட்டத்தில் பெரியசாமி என்ற நபர் ஸ்விகியில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆகியவற்றவை குழந்தைகளுக்காக ஆர்டர் செய்துள்ளார். இத்தகைய நிலையில், வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை திறந்து பார்த்த பொழுது அதில் சிப்ஸ், ஐஸ்கிரீம் இல்லை. மாறாக 2 ஆணுறை பாக்கெட்டுகள் இருந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியசாமி உடனே, ஸ்விகி நிறுவனத்தை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டார். இதைக் கண்ட ஸ்விக்கி நிறுவனம் உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டது. அத்துடன், பெரியசாமி செலுத்திய தொகையை அவருடைய வங்கி கணக்கிற்கு மீண்டும் அனுப்பிவிட்டு , காண்டம் பாக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டது.
ஸ்விக்கி நிறுவனத்தின் இந்த தவறால் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பெரியசாமி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து, அவருக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளுக்காக ஆர்டர் செய்த போது இப்படி காண்டம் கொடுக்கப்பட்டதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து பெரியசாமி, “தவறு நேர்ந்துவிட்ட பின்னர் பணத்தை திருப்பிக் கொடுப்பது எப்படி முறையாகும்? மன்னிப்பு கேட்டவுடன் ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவற்றை தான் நிறுவனம் கொடுத்திருக்க வேண்டும். பணத்தை அனுப்பியதால் குழந்தைகளுக்கு ஏமாற்றமும், வருத்தமும் தான் ஏற்பட்டது. பணம் பெரிய விஷயமே இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.